twitter
    Celebs»Manju Warrier»Biography

    மஞ்சு வாரியர் பயோடேட்டா

    மஞ்சு வாரியர் "லேடி சூப்பர் ஸ்டார்" ஆஃப் மலையாள சினிமா என்னும் அந்தஸ்தை பெற்று மலையாள திரைத்துறையில் பணியாற்றும் பிரபல முன்னணி நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படங்களை தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும், மலையாள திரைப்பட பின்னணி பாடகராகவும், நடன ஆசிரியராகவும் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார்.

    பிறப்பு

    மஞ்சு வாரியர் 1978-ம் ஆண்டு செப்டம்பர் 10-ல் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் பிறந்தவர். இவரது தந்தை மாதவன் வாரியர் ஒரு நிதி கணக்கு ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். இவரது பள்ளி படிப்பினை நாகர்கோவிலில் கற்றறிந்த இவர், பின்னர் இவரது தந்தை கேரளா மாநிலத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படத்தினை தொடர்ந்து கேரளாவிற்கு இடம் மாறி இவரது கல்வியினை தொடர்ந்துள்ளார்.

    கேரளாவில் தனது உயர்நிலை கல்வி மற்றும் கல்லூரி படிப்பினை கற்ற இவர், பல நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று புகழ் பெற்று, 1995ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய இவர், பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்பட பின்னணி பாடகராகவும் பணியாற்றி மலையாள திரையில் புகழ் பெற்றுள்ளார்.

    மஞ்சு வாரியர் சகோதரன் மது வாரியர் கேரளா திரைத்துறையில் நடிகனாகவும், தயாரிப்பாளராவும் பணியாற்றி வருகிறார். 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் மஞ்சு வாரியர் திலீப் என்னும் மலையாள திரைப்பட நடிகரை அலுவ ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் திருமணம் செய்துள்ளார், இவருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.


    திரையுலக தொடக்கம்

    தனது பள்ளி பருவத்திலிருந்து ஒரு சிறந்த நடனமாடுபவராக புகழ் பெற்ற மஞ்சு வாரியர், பல நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று பல விருதுகளையும் பாராட்டையும் பெற்று புகழ் பெற்றுள்ளார். பின்னர் இவருக்கு கேரளா அரசு காளத்திலக்கம் என்னும் பட்டமும் வழங்கப்பட்டது.

    தனது நடன திறமையின் மூலம் பிரபலமான மஞ்சு வாரியர், தனது பிரபலத்தின் மூலம் முதலில் 1995ம் ஆண்டு சாக்ஷ்யம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். பின்னர் தூர்தர்ஷன் என்னும் மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மொஹரவம் என்னும் தொடரில் நடித்து மலையாள திரையில் பிரபலமானார்.

    1995-ம் ஆண்டு சாக்ஷ்யம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர், பின்னர் 1996-ம் ஆண்டு சல்லபம், ஏ புழையம் கடன்னு, டில்லிவாலா ராஜகுமாரன், தூவல் கொட்டாரம், காலிவீடு என்னும் ஆறு படத்தில் நடித்து மலையாள திரையில் ஒரு முக்கிய நட்சத்திர நடிகையாக பிரபலமாகி புகழ் பெற்றுள்ளார் மஞ்சு வாரியர்.

    பிரபலம்

    மஞ்சு வாரியர் 1995 முதல் 1999 ஆண்டுகள் வரை பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற இவர் பின்னர் திருமணம் முடிந்து திரைவாழ்க்கையை விட்டு வாழ்ந்து வந்துள்ளார். 2014ம் ஆண்டு "ஹொவ் ஓல்ட் ஆர் யூ" திரைப்படத்தில் நடித்து மலையாள திரையுலகில் மீண்டும் தனது நடிப்பின் மூலம் பிரபலமானார்.

    இப்படத்திற்கு பின்னர் நாயகிகளுக்கான முக்கியத்துவம் உடைய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், முன்னணி நடிகையாகவும் "லேடி சூப்பர் ஸ்டார் ஆஃப் மலையாள சினிமா" என்னும் பட்டத்தினை பெற்று புகழ் பெற்றார்.

    தமிழில் 2019ம் ஆண்டு மலையாள பேன் இந்திய திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'லூசிஃபர்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் அறிமுகமான இவர், அதே ஆண்டு தனுஷின் 'அசுரன்' திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் புகழ் பெற்றார். பின்னர் அந்த ஆண்டு தமிழ் திரையுலகில் அசுரன் படத்திற்காக '2019 சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை' பல தரப்பு விருது அமைப்புகள் சார்பில் பெற்றுள்ளார்.

    மஞ்சு வாரியரின் சுய வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக "சல்லாபம்" என்ற மலையாள திரைப்படம் 2014 நவம்பர் மாதம் வெளியாகி பிரபலமானது. இப்படம் இவருக்கு மலையாள திரையுலகம் சார்பில் ஒரு கௌரவத்தை வழங்கியுள்ளது.