twitter
    Celebs»Mansi M M»Biography

    மானசி பயோடேட்டா

    எம் எம் மானசி இந்திய திரைப்பட மற்றும் கர்நாடிக் பாடகி. இவர் 15 ஆண்டுகளில் 70 பாடல்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். இவர் பாடிய ஸ்டைலிஷ் தமிழச்சி, கட்டிக்கடா, செம்ம மாஸ், ரோபோ ரோமியோ, சொட்டவாலா, ஆட்டக்காரி மாமன் பொண்ணு போன்ற பாடல்களின் வெற்றியில் இவரது குரலுக்கு ஒரு தனி இடம் உண்டு.  


    மானசி மும்பையில் தென்னிந்திய கலாச்சாரத்தோடு வளர்ந்தவர். இவரது 2 வயதில்லையே பாடல் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். இவர் ஆரம்ப கட்டத்தில் நவராத்திரி பூஜை, கணபதி பூஜைகளில் பாடல்களை பாடினார். இவரை கன்னட மொழியில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் இளயராஜா ஆவார். அதன் பிறகு மலையாளம், ஹிந்தி என படிப்படியாக வளர்ந்தார். 


    இவர் பாடல் பாடுவதோடு திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளின் குரலுக்கு டப்பிங் செய்வார். இவர் தெலுங்கில் பலவேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.