X
மாயா எஸ் கிருஷ்ணன்
Actress/Actor

மாயா எஸ் கிருஷ்ணன் பயோடேட்டா

மாயா எஸ் கிருஷ்ணன் - தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி மற்றும் மாடலிங் அழகியாக பணியாற்றி வரும் பிரபலம் ஆவார், மாயா எஸ் கிருஷ்ணன். இவர் தமிழ் வெள்ளித்திரையில் விக்ரம், துருவ நட்சத்திரம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

பிறப்பு 

மாயா எஸ் கிருஷ்ணன், 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் மதுரையில் பிறந்துள்ளார். மதுரையில் உள்ள டி.வி.எஸ் லட்சுமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்த இவர், பெங்களூரில் உள்ள அம்ரிதா யூனிவர்சிட்டி கல்லூரியில் இன்ஜினியரிங் பிரிவில் தனது இளங்கலை பட்டம் வென்றுள்ளார்.

சிறுவயதில் இருந்தே இவர் ஜிம்நாஸ்டிக் கலை பிரிவில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். தேசிய அளவில் ஜிம்நாஸ்டிக் வீராங்கனையாக புகழ் பெற்றுள்ளார். இவரின் தந்தை சுந்தர கிருஷ்ணன் மற்றும் இவரின் சகோதரி ஸ்வாகத எஸ் கிருஷ்ணன் இருவரும் தமிழ் சினிமாவில் பாடகராக பணியாற்றி பிரபலமாகியுள்ளனர்.

திரையுலக தொடக்கம்

இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய 'வானவில் வாழ்க்கை' திரைப்படத்தில் ஒரு பாடகராக தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ள மாயா எஸ் கிருஷ்ணன், 2016 ஆம் ஆண்டு வெளியான தொடரி படத்தில் ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

பின் தமிழ் சினிமா வெள்ளித்திரையில் மகளிர் மட்டும், வேலைக்காரன், ஏன்டா தலையில என்ன வெக்கல போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். 

2018 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தினை தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் கமல் ஹாசனுடன் நடித்து திரையுலகில் பல தனக்கென ரசிகர் கூட்டத்தை அமைத்து பலரால் கொடண்டப்பட்டுள்ளார், மாயா எஸ் கிருஷ்ணன்.

பிக்பாஸ் போட்டியாளர்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக மாயா எஸ் கிருஷ்ணன் பங்கேற்றுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+