twitter
    Celebs»Mohan»Biography

    மோகன் (மைக்) பயோடேட்டா

    மோகன் (மோகன் ராவ், மைக் மோகன்) என புனை பெயர் கொண்டு அழைக்கப்படும் இவர் தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ், தெலுங்கு. மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார்.

    இவர் 1977-ம் ஆண்டு "கோகிலா" என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இவர் தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த "கோகிலா" என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் "கோகிலா மோகன்" என அழைக்கப்பட்டார். தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவை குருவாகக் கருதுகிறார்.

    1980-ம் ஆண்டு "மூடு பணி" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். பின்னர் பாடகராக இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இதனால் இவர் "மைக் மோகன்" என்றும் புகழ்பெற்றவர். 1982-ம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் என பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார்.