நிவாஸ் கே பிரசன்னா, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட பிரபல இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழில் 2014-ஆம் ஆண்டு நடிகர் அசோக் செல்வன் முன்னணி நடிப்பில் வெளியான தெகிடி திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
பிறப்பு / கல்வி
நிவாஸ் கே பிரசன்னா, தமிழகத்தில் முக்கிய நகரான கோயம்பத்தூரில் பிறந்து வளர்ந்துள்ளார். இவர் சிறு வயதில் இருந்து இசையில் ஆர்வம் கொண்டு கர்னாடிக் இசை கற்று வந்துள்ளார். தனது பள்ளியில் பியானோ இசை கருவி மற்றும் கர்னாடிக் இசையில் செவென்த் ஃகிரேடு என்னும் அளவிற்கு இசை கற்றுள்ளார்.
பள்ளி படிப்பினை கோவையில் கற்றுள்ள நிவாஸ் கே பிரசன்னா, தனது கல்லூரி படிப்பிற்காக சென்னை எஸ்.ஆர்.எம் கலைக்கல்லூரியில் விஸ்வுல் கம்யூனிகேஷன் என்னும் துறையில் சேர்ந்து தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார்.
திரையுலக அனுபவம்
சினிமாவில் திரைவாய்ப்பினை கேட்டு தனது கல்லூரி வாழ்க்கையில் இருந்து போராடி வந்துள்ள இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் சில குறும்படங்களில் இசையமைக்க வாய்ப்பின்னை பெற்று அதன் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறையில் பணியாற்றி பிரபலமானவர்.
இவர் 2013-ஆம் ஆண்டு "பிட்சா 2 - வில்லா" என்னும் திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பினை பெற்றுள்ளார். ஆனால் சில காரணங்களால் இவர் இப்படத்திலிருந்து நிராகரிக்கப்பட்டார். பின்னர் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் இன்னொரு திரைப்படமான தெகிடி என்னும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி தமிழில் இசையமைப்பாளராக இப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தெகிடி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றி மற்றும் நிவாஸ் இசையமைத்த பாடல்கள் தமிழில் மிக பெரிய பிரபலமானது. இதன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்றார் நிவாஸ்.