பாண்டியராஜன் பயோடேட்டா

    பாண்டியராஜன் தமிழ் நடிகராவார். இவர் நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். இவர் நடிப்பை தவிர சில படங்களையும் இயக்கியுள்ளார். 

    பாண்டியராஜன், ரத்னம் மற்றும் சுலோச்சனா என்பவருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு மகேஸ்வரி மற்றும் கீதா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். 1986-ம் ஆண்டு இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கவிதையளரான அவினாசி மணி என்பவரின் மகள் வாசுகி என்பவருக்கும் இவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு பிரித்திவி ராஜன், பல்லவராஜன், மற்றும் பிரேம் ராஜன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.

    பாண்டிய ராஜன் நடிப்பதற்காக திரையுலகிற்கு வந்தார். இவருடைய உயரத்தின் காரணமாக இவர் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்பு திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார். அதன் பிறகே நடிப்பு துறையில் நுழைந்தார். தற்போது துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.