twitter
    Celebs»Poonam Bajwa»Biography

    பூனம் பஜ்வா பயோடேட்டா

    பூனம் பஜ்வா, பிறப்பால் ஒரு பஞ்சாப் ஐயர் குடும்பத்தை சார்ந்த இவர், தென்னிந்திய முன்னணி நடிகை ஆவார்.  தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமாகியுள்ள இவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் தமிழில் இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தில் நடித்து அறிமுகமாபூனம் பஜ்வானவர்.

    பிறப்பு / திரையுலக தொடக்கம்

    மும்பையில் உள்ள ஒரு பஞ்சாப்-ஐயர் குடும்பத்தில் பிறந்துள்ள பூனம் பஜ்வா, 2005-ம் ஆண்டு "மிஸ் புனே" என்ற பட்டத்தினை பெற்று புகழ் பெற்றவர்.

    ஆந்திர மாநிலத்தில் பொழுது போக்கிற்காக மாடெல்லிக் துறையில் பணியாற்றி வந்துள்ள இவர், சில திரைத்துறை பிரபலங்களின் அறிமுகத்தில் "மொடடி சினிமா" என்ற திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.


    "பிரேமன்ட் இன்டே", "பாஸ் " போன்ற தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்துள்ள பூனம் பஜ்வா, பின்னர் கன்னட திரைப்படத்திலும் நாயகியாக நடித்து கன்னட திரையுலகிலும் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

    தெலுங்கு, கன்னட என இந்த இரு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற பூனம் பஜ்வா, தமிழில் 2008-ம் இயக்குனர் ஹரி இயக்கிய "சேவல்" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

    திரையுலக அனுபவம் / பிரபலம்

    2008-ம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான பூனம் பஜ்வா, பின்னர் தமிழில் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, துரோகி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ஒரு நடிகையாக பிரபலமானவர். 

    தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து நடிகையாக புகழ் பெற்றுள்ள இவர், தமிழில் அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக சித்தரிக்கப்பட்டார். 

    தமிழில் 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இவர் நடித்த ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று இவருக்கு பல பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.