பூர்ணிமா பாக்யராஜ் பயோடேட்டா

    பூர்ணிமா பாக்கியராஜ் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980லிருந்து 1984 களில் பிரபல நடிகையாகத் திகழ்ந்தார். இவர் சங்கர் என்ற நடிகருடன் மலையாளத்திலும், மோகன் என்ற நடிகருடன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.

    இவர் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் பாக்கியராஜ் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிகளுக்கு சரண்யா, சாந்தனு என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.