பிரகாஷ் ராஜ் பயோடேட்டா

    பிரகாஷ் ராஜ், இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.

    இவர் நடிகர் மட்டுமில்லாது இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கின்றார். தமிழில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் டோனி ஆகும். அதற்க்கு பின் சில திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார்.