பிரியங்கா சோப்ரா பயோடேட்டா

    பிரியங்கா சோப்ரா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2002-ம் ஆண்டு தமிழில் விஜயுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் ஹிந்தியில் 2003-ம் ஆண்டு  தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.

    இவர் 2000-ம் ஆண்டின் உலக அழகி ஆவார். இவர் திரையுலக வாழ்க்கைக்கு முன்னாள் வடிவழகியாக பணியாற்றியுள்ளார். இவர் திரைப்படங்களில் நடிகையாகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டு பணியாற்றிவந்துள்ளார்.

    திரைப்படங்கள் மூலம் பிரபலமான இவர் தன நடிப்பிற்காக தேசிய விருது, பிலிம் பேர் விருது பின்னர் 2016-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது அளித்து கௌரவ படுத்தியது. இவர் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் உலகளவில் 100 மிக முக்கிய செல்வாக்கு உடைய மக்களுள் இவரும் தேர்ந்தேடுக்கப்பட்டார். பின்னர் போர்ப்ஸ் என்ற அமெரிக்கா பத்திரிகை இதழ் ஒன்றில் நடத்தப்பட்ட உலகளவில் 100 முக்கிய சக்திவாய்ந்த பெண்கள் என்ற தேர்வில் இவரும் தேர்ந்தேடுக்கப்பட்டார்.

    பிரியங்கா சோப்ரா (2003)-ம் ஆண்டு தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை என்ற ஹிந்தி திரைப்படத்தில் தொடங்கி ஹிந்தியில் அதே ஆண்டு ராஜ் கன்வாரின் "ஆண்டாஸ்" படத்தில் நடித்ததன் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார்.

    இவர் 2018-ம் ஆண்டு நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் புரிந்தார்.