twitter
    Celebs»Ramarajan»Biography

    ராமராஜன் பயோடேட்டா

    ராமராஜன் - தமிழ் சினிமா முன்னணி நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பாடல் ஆசிரியர் ஆவார். இவர் சினிமாவை தொடர்ந்து 1998ல் தமிழக சட்டசபை பாராளமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு தமிழ் சினிமாவில் "மக்கள் நாயகன்" என்ற புனைப்பெயர் உண்டு.

    பிறப்பு / திரையுலக தொடக்கம்

    ராமராஜன் 1958-ஆம் ஆண்டு அக்டோபர் 8ல் மதுரையில் பிறந்துள்ளார். சினிமாவில் நடிக்கும் விருப்பத்தோடு சென்னைக்கு வந்துள்ள இவர், 1977இல் தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். பின்னர் 1985ஆம் ஆண்டு 'மண்ணுக்கேத்த பொண்ணு' என்ற தமிழ் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

    ராமராஜன் 1977ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை நடிகனாக தொடங்கிய இவர், துணை நடிகர் கதாபாத்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். பின்னர் 1986 ஆம் ஆண்டு "நம்ம ஊரு நல்ல ஊரு" என்ற படத்தில் நாயகனாக நடித்து தான் திரைப்பயணத்தை நாயகனாக தொடங்கியுள்ளார்.

    பிரபலம்

    தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அறிமுகம் பெற்ற இவர், பின்னர் ஒரு நடிகனாக பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளார். குறிப்பாக இவர் கிராம திரைக்கதையில் தொடர்ந்து நடித்து "மக்கள் நாயகன்" என்ற புனைப்பெயர் பெற்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்றுள்ளார்.

    நடிகர் ராமராஜனின் திரைவாழ்வில் இவர் நடித்த கரகாட்டக்காரன், செண்பகமே செண்பகமே, அம்மன் கோவில் வாசலிலே திரைப்படங்கள் மிக பெரிய வெற்றி திரைப்படங்கள் ஆகும். இந்த படங்கள் இவரது திரைவாழ்வில் இவர் நடித்த முக்கிய திரைப்படங்களாகவும் உள்ளன. ராமராஜன் இயக்குனராக இயக்கம் படங்களில் இவரே நாயகனாக நடித்துள்ளார். 1980 - 2000 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் ஒரு முன்னணி நடிகனாகவும், முக்கிய பிரபலமாக திகழ்ந்தவர்.

    நடிகனாக தமிழ் சினிமாவில் ராமராஜன் நடித்த பிரபல திரைப்படங்கள்

    நம்ம ஊரு நல்ல ஊரு
    செண்பகமே செண்பகமே 
    எங்க ஊரு காவல்காரன்
    என்ன பெத்த ராசா
    கரகாட்டக்காரன்

    இயக்குனராக தமிழ் சினிமாவில் ராமராஜன் இயக்கிய பிரபல திரைப்படங்கள் 

    மண்ணுக்கேத்த பொண்ணு 
    அம்மன் கோவில் வாசலிலே
    நம்ம ஒரு ராசா

    திருமணம்

    நடிகர் ராமராஜன் தமிழ் சினிமாவில் நடிகையாக புகழ் பெற்ற நளினி அவர்களை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 1988ஆம் ஆண்டு அருணா மற்றும் அரூண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பின் இந்த ஜோடிகள் கருத்து வேறுபாடு காரணமாக 2000ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

    அரசியல் 

    ராமராஜன் 12ஆம் லோக் சாப தேர்தலில் அணைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக) சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு 1988ஆம் ஆண்டு வெற்றி பெற்றுள்ளார்.