twitter
    Celebs»Sathish»Biography

    சதீஷ் பயோடேட்டா

    சதீஸ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் திரைப்படங்களில் நகைச்சுவை காதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமானவர் ஆவார். இவர் 2013-ம் ஆண்டு சிவகார்த்திக்கேயனுடன் எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் புகழ்பெற்றுள்ளார்.

    இவர் 8 ஆண்டுகளாக க்கிரேஷி மோகனிடம் உதவியாளராக இருந்தார், இவர் இயக்கிய மேடை நாடகங்களில் நடித்து திரைக்கலையை கற்றறிந்த இவர், நடிப்பு மற்றும் திரையுலகை சார்ந்த மற்ற திறன்கள் மீதும் ஆர்வம் கொண்டு திறன் வளர்த்து கொண்டுள்ளார், இவர் க்கிரேஷி மோகன் வசனம், திரைக்கதை எழுதி தயாரித்த "சாக்லேட் கிருஷ்ணா " என்ற நாடக தொடரில் மோகனின் உதவியாளராக பெரும் பங்காற்றியுள்ளார்.

    எ.எல் விஜய் இவரை 2010-ம் ஆண்டு மதராசபட்டினம் திரைப்படத்தில் நடிப்பதற்காக அழைத்தற்கு முன்பே இவர் 2008-ம் ஆண்டு எ.எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் திரைப்படத்தில் உரையாடல் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். திரைப்படங்களில் கண்டறியாத சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர்,எதிர்நீச்சல் படம் மூலம் பிரபலமானார்.

    2008-ம் ஆண்டு ஜெரி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய இவர், 2010-ம் ஆண்டு மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். பின்னர் இவர் மதராசபட்டினம் (2010), கொல கொலையா முந்திரிக்கா (2010), வத்திக்குச்சி (2013), வாகை சூட வா (2011), மெரினா (2012), தாண்டவம் (2012) ஆகிய திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளுக்கே வந்து செல்லும் கண்டறியாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.