ஷாலினி, தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து பல்வேறு பிரிவுகளில் பல விருதுகளை வென்றுள்ள ஒரு முன்னணி நடிகை. இவர் தமிழ் திரைப்பட பிரபல முக்கிய நடிகரான "அஜித்குமார்" என்பவரின் மனைவி ஆவார்.
குழந்தை நடச்சத்திரத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்து "பேபி ஷாலினி" என புகழ் பெற்ற இவர், பின்னர் நாயகியாக 1997-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இவரின் திரைப்படங்களில் ஷாலினி ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை எளிதாக கவரும் வகையில் நடித்து பல ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபல நடிகையாக வாகை சூடியுள்ளார்.
பிறப்பு
ஷாலினி, கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் என்ற நகரில் 1979-ஆம் ஆண்டு நவம்பர் 20ல் பாபு மற்றும் அலிஸ் என்பவர்களுக்கு மகளாக பிறந்துள்ளார். இவருக்கு ஷாமிலி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற அண்ணனும் உள்ளனர்.
இவரது தந்தை சினிமாவில் நடிக்க வேண்டும் என பெரிய அளவில் ஆசை கொண்டவர், ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. சினிமாவில் நடிப்பதற்காக இவரது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளது. பின் இவர்கள் சிறுவயதில் இருந்து சென்னையில் வாழ்ந்து வருகின்றனர்.
ஷாலினி சிறுவயதில் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை ஆவார், இவர் தமிழ் நாடு மாநில அளவு பேட்மிட்டன் போட்டியில் பல முறை கலந்து கொண்டுள்ளார்.
ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் ரிஷி மற்றும் தங்கை ஷாமிலி இருவரும் திரையுலகில் நடிகர்/நடிகையாக பணியாற்றி வருகின்றனர்.
தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை கொண்டிருந்த இவரின் தந்தை, தனது பிள்ளைகளின் மூலம் தனது ஆசைகளை நிறைவேற்றி கொண்டுள்ளார்.
திரைப்பட தொடக்கம்
மலையாள திரையுலகில் நடிகை ஷாலினி, தனது 3 வயதில் "எண்டே மாமாட்டிக்குட்டியாஅம்மாக்கு" என்ற திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும், பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஒரு முக்கிய நடிகையாக புகழ் பெற்றார்.
1984-ஆம் ஆண்டு தமிழில் கே. பாலாஜி இயக்கிய "ஓசை" திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான ஷாலினி, அடுத்தடுத்து பந்தம், பிள்ளைநிலா, விடுதலை என பல படங்களில் குழந்தை நட்சத்திரத்தில் நடித்து அனைவராலும் கண்டறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக புகழ் பெற்றார்.
பிரபலம்
தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை முடித்த ஷாலினி, 1997-ஆம் ஆண்டு "அணியாதி பிறவு" என்ற மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானார். பின்னர் கலியூஞ்சல், நக்ஷத்ராதாரத்து என்ற மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த ஷாலினி, பின்னர் தமிழில் அதே ஆண்டு மலையாளத்தில் வெளியான அணியாதி பிறவு படத்தின் தமிழ் ரீமேக் படமாக உருவான "காதலுக்கு மரியாதையை" என்ற படத்தில் நாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.
பின்னர் தமிழ் திரையுலகில் அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே என பல வெற்றி படங்கள் நடித்து ஒரு முன்னணி முக்கிய நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.
தமிழில் இவர் 2001-ஆம் ஆண்டு பிரியாத வரம் வேண்டும் என்ற ஒரு காதல் திரைப்படத்தில் நடித்து பின் நடிகர் அஜித் குமார் என்னும் தனது சக நடிகரை காதல் திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதனை நிறுத்தி உள்ளார்.
திரையுலக அங்கீகாரம்
இவர் தமிழ், மலையாளம் திரைப்படங்களில் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தற்காக இவருக்கு கேரளா அரசு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினை வழங்கியும், தமிழக அரசு சிறந்த நடிகைக்கான விருதினை "அலைபாயுதே" திரைப்பத்திற்காக வழங்கியும் இவரை கௌரவப்படுத்தியுள்ளது.
பின் தனியார் விருது அமைப்புகள் சார்பில் பல பிரிவுகளில் பல விருதுகளை இவர் வென்றுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான அஜித் குமார் என்பவரை இவர் 1999-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தனது திருமணத்திற்கு பின்னர் ஷாலினி நடிக்கவிருந்த இரண்டு படங்களில் மட்டும் நடித்து தனது திரைப்பட வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.