twitter
    Celebs»Shanmugasundaram»Biography

    சண்முகசுந்தரம் பயோடேட்டா

    சண்முகசுந்தரம் (ஷண்முக சுந்தரம்) தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களுடன் பணியாற்றி மக்களின் பேராதரவை பெற்றவர்.

    திரையுலக அனுபவம்

    சண்முகசுந்தரம் சென்னையின் ஒரு பிரபல தொழிலதிபருக்கு மகனாக பிறந்தவர். இவரின் கல்லூரி காலகட்டத்தில் தனது சக நண்பர்களுடன் சினிமாவில் ஆர்வம் கொண்டு சில நாடக பட்டறைகளுக்கும், சினிமாவிற்கும் சென்று வந்துள்ள இவர், பின்னர் ஒரு நண்பனுடன் இனைந்து ஒரு நாடகத்தில் நடிக்க சென்றுள்ளார்.

    நாடகத்தில் இருந்து கூத்து பட்டறைக்கு சென்றுள்ள இவர், ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகா பணியாற்றியுள்ளார். ஒரு நடிகரின் நடிப்பில் திருப்தி அடையாத குழு அவருக்கு பதில் அந்த இடத்தில் இவரை நியமித்தது. இவரின் அற்புத நடிப்பில் அனைவரின் கவனத்தை பெற்ற இவர் அந்த பட்டறையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

    இவர் ஏற்று நடித்து ஹிட்லர் கதாபாத்திரம் நடிகர் சிவாஜி கணேசனை கவர்ந்தது, பின்னர் நடிகர் சிவாஜியின் மூலம் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

    1963ம் ஆண்டு "ரத்த திலகம்" என்னும் திரைப்படத்தில் ஒரு ராணுவ வீராக நடித்துள்ள இவர், பின்னர் பக்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இதற்கு பின்பு தமிழில் பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ள இவர், சிவாஜி கணேசனின் "கர்ணன்" திரைப்படத்தில் சல்லிய சக்ரவர்த்தி கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

    1989ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற "கரகாட்டக்காரன்" என்னும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், அந்த கதாபாத்திரத்திற்காக பல விருதுகளையும் பாராட்டுகளையும் தமிழ் திரையுலகில் வென்றுள்ளார்.

    இவர் 1990 மற்றும் 2000 காலகட்டங்களில் பிரபலமாக நடித்து தமிழ் திரையில் புகழ் பெற்றுள்ள இவர், 2007ம் ஆண்டு "சென்னை 600028" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவினை பெற்று பிரபலமானார். இதற்கு பிறகு 2010ம் ஆண்டு "கோவா" திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

    சண்முகசுந்தரம் நகைச்சுவை கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரமாக தமிழ் திரையில் 2007 முதல் 2017ம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று பிரபலமாகியுள்ளார்.

    சின்னத்திரை அனுபவங்கள்

    வெள்ளித்திரை வெற்றியை தொடர்ந்து சின்னத்திரையிலும் நடிக்க தொடங்கியுள்ள இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அண்ணாமலை, செல்வி, அரசி தொடர்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

    இறப்பு

    சண்முகசுந்தரம் பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் உயிரிழந்துள்ளார்.