X
ஷில்பா மஞ்சுநாத்
Actress

ஷில்பா மஞ்சுநாத் பயோடேட்டா

ஷில்பா மஞ்சுநாத் இந்திய திரைப்பட நடிகை மற்றும் "மிஸ் கர்நாடகா" பட்டம் வென்றுள்ள பிரபல மாடலிங் ஆவார். இவர் கன்னட திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கி மிக குறுகிய காலத்தில் தென்னிந்திய முன்னனி நடிகைகளுள் ஒருவராக புகழ் பெற்றுள்ளார்.

பிறப்பு

ஷில்பா மஞ்சுநாத் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தவர். தனது பள்ளி மற்றும் கல்லூரி என தனது கல்வியை பெங்களூரில் உள்ள கல்வி நிறுவனங்களில் கற்று பயின்றுள்ள இவர், விஸ்வேஸ்வரய்யா என்ற தொழில்நுட்ப பல்கலைக்கழக கல்லூரியில் இ.சி.இ என்ற பிரிவில் தனது இளங்கலை பட்டம் வென்றுள்ளார்.



திரையுலக தொடக்கம்

தனது கல்லூரி படிப்பிற்கு பின்னர் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டுள்ள ஷில்பா மஞ்சுநாத், மாடலிங் துறையில் பணியாற்றி 2013-ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற அழகி போட்டியில் போட்டியாளராக பங்குபெற்று, 2013ஆம் ஆண்டின் "மிஸ் கர்நாடக" என்னும் பட்டம் வென்று புகழ் பெற்றுள்ளார்.

மாடலிங் துறையில் வெற்றி பெற்று சாதித்த இவர், பின் கன்னட தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஒளிபரப்பான பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான "லைப் சூப்பர் குரு" என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

பிரபலம்

2016-ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் "முன்கரு மலே 2" என்ற கன்னட திரைப்படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் இவர் மலையாளத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான "ரோசாப்பூ" என்ற திரைப்படத்தில் நடித்து மலையாள திரையிலும் நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் நடிகர் விஜய் ஆன்டனி நடித்த "காளி" திரைப்படத்தில் "பார்வதி" என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பின்னர் 2019-ஆம் ஆண்டு "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" என்ற காதல் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யான்-ற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "கண்ணம்மா உன்ன" என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பிரபலமானது, இப்பாடல் மூலம் இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ளார்.


ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+