ஷிவானி நாராயணன் பயோடேட்டா

    ஷிவானி நாராயணன், தமிழ் திரைப்பட சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடல் அழகி ஆவார். சிறுவயதில்லையே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ள இவர், சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்.

    ஷிவானி, பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட "சரவணன் மீனாட்சி", என்ற தொடரில் ஒருத்தி சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர். பின்னர் "பகல் நிலவு" என்ற தொடரில் நாயகியாக நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

    ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் என இரண்டு நாடக தொடர்களில் நாயகியாக நடித்து தமிழ் சின்னத்திரையில் பிரபலமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு சின்னத்திரையில் புகழ் பெற்றுள்ளார். இவர் இரட்டை ரோஜா என்ற தொடரில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.

    தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் இவர், சமீப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் இவரது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து தமிழ் ரசிகர்களின் கவனத்தில் பிரபலமாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது இவருக்கென பல ரசிகர்கள் உள்ளனர்.