சைமன் கே கிங் பயோடேட்டா

    சைமன் கே கிங் இந்திய தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 555 திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஆவார். இப்படத்தினை தொடர்ந்து இவர் ஐந்தாம் தலைமுறை வைத்திய சிகாமணி திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

    இந்த சிறு பட்ஜெட் திரைப்படங்களில் இசையமைத்து வந்துள்ள இவர், 2017ம் ஆண்டு வெளியான சத்யா படத்திற்கு பின்னர் முன்னணி இசையமைப்பாளராக அங்கீகரிக்கப்பட்டார். பின்னர் இவரின் இசையில் வெளியான கொலைகாரன், மார்க்கெட் ராஜா ஆகிய திரைப்படங்கள் வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.