Celebs » Sridevi Kapoor » Biography
பயோடேட்டா
ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை. 1967ல் கந்தன் கருணை திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படத்தில் நடித்து உள்ளார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை ஃபிலிம்ஃபேர் விருதினையும் வென்றுள்ளார்.

கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil