twitter
    Celebs»Sunidhi Chauhan»Biography

    சுனிதி செளகான் பயோடேட்டா

    சுனிதி சௌஹான் இந்தி மொழித் திரைப்படங்களில் பாடிவரும் முக்கிய பின்னணிப் பாடகர் ஆவார். சுனிதி ஷௌஹான் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, அஸ்ஸாமி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 2,000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் பதினான்கு முறை பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவற்றில் மூன்று முறை வென்றுள்ளார். மேலும் இரண்டு ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகளையும், இரண்டு ஐபா விருதுகளையும் மற்றும் ஒரு ஜீ சினி விருதையும் பெற்றுள்ளார்.சுனிதி சௌஹான் தம் திரைத்துறை பிரவேசத்தை சாஸ்த்ராவில் துவங்கினார்.

    சுனிதி ஷௌஹான் டெல்லியில் பிறந்தார்.அவரது தந்தை ஒரு நாடக கலைஞராதலால் அவரை இளம் வயதிலேயே இசைத்துறையில் சேர்த்துவிட்டார்.ஷௌஹானுக்கு சுநேஹா என்றொரு தங்கை உண்டு.

    2002 -ம் ஆண்டில் ஷௌஹான் பாபி கான் என்பவரை மணந்து கொண்டார்.ஆனால் அந்த ஜோடி பிரிவுற்றது.ஏப்ரல் 27, 2012 ல் சுனிதி ஷௌஹான் தம் பால்ய நண்பரும்,இசையமைப்பாளருமான ஹிதேஷ் சோநிக்கை மணந்தார்.இத்திருமணத்திற்கு சக பாடகர்களான ஆஷா போஸ்லே, கவிதா கிருஷ்ணமுர்த்தி,ஸ்மிதா தாகேரே, அல்கா யாக்னிக், கொன்கொனா சென் ஷர்மா ஆகியோர் வந்திருந்தனர்.

    சுனிதி ஷௌஹான் முதல் பாடலைத் தன் நான்காவது வயதில் பாடினார். 1996-ம் ஆண்டு "மெரி ஆவாஸ் சுனோ" என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமது "ஐர க்ஹைர னது க்ஹைர" ஆல்பத்திற்க்காக வெற்றிப்பெற்றார். அது குழந்தைகளுக்கான ஆல்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தன் அடையாளத்தை இழந்தது.

    சுனிதி சௌஹான் ஹிந்தி திரைத்துறையிலுள்ள முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் பாடகிகளுள் முக்கியமானவராவார்.அவர் மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய், பிரீத்தி சிந்தா, ராணி முகர்ஜி, கரீனா கபூர், பிபாசா பாசு, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, கொன்கொனா சென் ஷர்மா ஆகியோருக்கும் மற்றும் பலருக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும் அவர் முன்னாள் நடிகைகளான ரேகா ஆகியோரின் குரல்களுக்காகவும் பாடியுள்ளார். அவரின் பின்னணி குரல் இருபெரும் முன்னணி நடிகைகளான கஜோல்க்காக பானா படத்திலும், மாதுரி தீட்சித்க்காக ஆஜா நச்சலே படத்திலும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

    2011 ம் ஆண்டு சுனிதி சௌஹான் உலக அளவிலான பாப் பாடல்கள் பாடும் முதல் இந்திய பெண்மணி எனும் சிறப்பை பெற்றார்.