தேங்காய் ஸ்ரீநிவாசன் பயோடேட்டா

    தேங்காய் சீனிவாசன் 1970-களிலும், 1980-களிலும் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர் ஆவார். இவர் "கல்-மணம்" என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார். 

    இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, வில்லன் கதாபாத்திரங்களிலும், குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 

    மேலும் இவர் திரைத்துறையில் "ஒரு விரல்" திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இவர் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சிவாஜி கணேசன் நடித்த "கிருஷ்ணன் வந்தான்" என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.

    இவர் தன்னுடைய உறவினரின் ஈமச் சடங்கிற்காக பெங்களூருவிற்குச் சென்றபோது, மூளை குருதிப்பெருக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி, 1987-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் உயிரிழந்தார்.