டைகர் ஷெராப் திரைப்பட பாடகர், நடிகர் என ஹிந்தி திரையுலகில் பன்முகம் கொண்டு பணியாற்றிவருபர். ஹிந்தியில் வெளியான நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் தற்போது அதிரடி நாயகனாக நடித்து வருகிறார். இவர் ஹிந்தி திரைப்படங்களில் அணைத்து கதாபாத்திரங்களிலும் பிரபலமாக நடித்துவரும் நடிகர் ஜாக்கி ஷெராப்-ன் மகன் ஆவார்.
பிறப்பு
ஜாக்கி ஷெராப் மற்றும் ஆயிஷா ஷெராப் என்பவர்களுக்கு மகனாக 1990-ல் பிறந்தவர். டைகர் ஷெராப் தனது பெயரினை திரையுலகிற்காக டைகர் என பெயர் மாற்றம் செய்துள்ளார். இவருக்கு கிருஷ்ணா ஷெராப் என்ற ஒரு தங்கை உள்ளார்.
குஜராத்தி மற்றும் பெங்காலி மொழிகளை தாய் மொழியாக கொண்டுள்ள இவர், கடவுள் சிவன்-யை வழிப்படுபவர். இவர் கராத்தே மற்றும் சண்டை போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்றுள்ளார்.
திரையுலக தொடக்கம்
ஜாக்கி ஷெராப் நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியான தூம் 3 திரைப்படத்திற்கு அமீர் கான்-ன் உடல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் நடனங்களிலும், மற்றும் சில கலைகளை பயின்று திரையுலகில் பணியாற்றுகிறார்.
இவரின் தந்தை ஜாக்கி ஷெராப் புகழ் பெற்ற ஹிந்தி திரைப்பட நடிகர் ஆவார். இவரின் துணை கொண்டே இவர் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய காலத்தில் இவர் நகைச்சுவை திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகியுள்ளார், பின்னர் அதிரடி திரைக்கதையில் கலக்கி வருகிறார்.
2014-ம் ஆண்டு ஹீரோபதி நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ள இவர், பின்னர் அதிரடி திரைப்படத்தில் நடித்து வெற்றிப்பெற்றதை தொடர்ந்து ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஹிந்தியில் நடித்த வார் திரைப்படமானது தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் டப் செய்து இந்தியாவில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் இவர், தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.