twitter
    Celebs»Vetrimaran»Biography

    வெற்றிமாறன் பயோடேட்டா

    வெற்றிமாறன், தமிழ் திரைப்பட பிரபல முன்னணி இயக்குனர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி அறிமுகமானவர். பின்னர் உதவி இயக்குனராக பிரபல தமிழ் இயக்குனர்களிடம் பணியாற்றி இயக்குனராக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் புகழ் பெற்றுள்ளார்.

     

    பிறப்பு


    வெற்றிமாறன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை சித்ராவேல் ஒரு மருத்துவராக பணியாற்றிவர், தாய் ஒரு எழுத்தாளராக பல நாவல் புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் பிறப்பிற்கு பின்னர் இவரின் குடும்பம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.

     

    திரையுலக தொடக்கம்


    வெற்றிமாறன், 1999ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இயக்குனர் பாலு மஹேந்திரன் இயக்கத்தில் உருவான "காதல் நேரம்" என்ற நிகழ்ச்சியில் ஒரு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் 52 பாகங்களை கொண்டுள்ளது. இவர் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு நாளிற்கு 50 முதல் 60 கதைகளை படித்து ஒரு கதையாக தேர்ந்தேடுத்து திரைக்கதை பற்றி சில நுணுக்கங்களை கற்றறிந்தார்.

     

    இவர் தமிழ் திரையுலகில் ஒரு உதவி இயக்குனராக காதல் வைரஸ் படத்தினை இயக்கிய இயக்குனர் கதிர் இடம் உதவி இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் இயக்குனர்  மஹேந்திராவின் 'ஜூலி கணபதி' மற்றும் 'அது ஒரு கனா காலம்' படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

     

    'அது ஒரு கனா காலம்' படத்திற்கு பின்னர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் நடிப்பதற்காக ஒரு திரைக்கதை உருவாக்கியுள்ளார். அந்த கதைக்கு "தேசிய நெடுஞ்சாலை 47" என்ற தலைப்பினை வைத்துள்ளார். பின்னர் இப்படம் பல தயாரிப்பாளர் கையில் மாறி ஒரு இறுதியில் இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் 2013ம் ஆண்டு உருவானது.

     

    திரையுலக அனுபவம்


    வெற்றிமாறன் இயக்குனராக தமிழில் 2007ம் ஆண்டு பொல்லாதவன் திரைப்படத்தினை இயக்கி அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

     

    இவர் இயக்குனராக ஆடுகளம், விசாரணை, வாடா சென்னை போன்ற பல வெற்றி படங்களை இயங்கி தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி முக்கிய இயக்குனராக புகழ் பெற்றுள்ளார். இவர் இயக்கிய படங்கள் தமிழில் பல விருதுகளை வென்று குவித்துள்ளது. மேலும் இவர் இயக்கிய விசாரணை திரைப்படம் உலகளவில் பிரபலமாகி ஆஸ்கார் விருதிற்கு நேர்முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

     

    தமிழ் திரையில் இயக்குனராக புகழ் பெற்ற இவர், பின்னனர் தயாரிப்பாளராக உதயம் தேசிய நெடுச்சாலை 4, நான் ராஜாவாக போகிறேன், பொறியாளன் போன்ற திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளர்கவும் பிரபலமாகியுள்ளார்.