twitter
    Celebs»Vincent Asokan»Biography

    வின்சென்ட் அசோகன் பயோடேட்டா

    வின்சென்ட் அசோகன் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக பணியாற்றி பிரபலமானவர். இவர் குறிப்பாக வெள்ளித்திரையில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் எஸ்..அசோகன் என்பவரின் மகன் ஆவார்.


    பிறப்பு


    வின்சென்ட், தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகரான எஸ் அசோகன் என்பவரின் இளைய மகன் ஆவார். தனது தந்தையை தொடர்ந்து இவரும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.


    திரைப்பயணம்


    வின்சென்ட் அசோகன் தமிழ் திரையுலகில் 2004ம் ஆண்டு வெளியான "ஏய்" திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து இவர் 6'2, தகப்பன் சாமி, யோகி என பல தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.


    2009ம் ஆண்டு வெளியான "யோகி" திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததிற்காக இவருக்கு சிறந்த வில்லனுக்கான விருதினை பெற்று பிரபலமானார்.


    தனது தந்தை போலவே இவரும் தமிழ் வெள்ளித்திரையில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.