2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி?, நடிகை புலம்பல்
சென்னை: 2 லட்டு போச்சே என்று இளம் நடிகை ஒருவர் கவலையில் உள்ளாராம்.
சொந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை அவர். அவர் பெரிதும் நம்பிய ரீமேக் படம் பப்படமானது. இதையடுத்து அவர் நடித்து வரும் ஒரு படத்தை பெரிதும் நம்புகிறார்.
அந்த படம் வெளியானால் டல்லாக உள்ள தனது மார்க்கெட் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் என்று நம்பிக்கையில் உள்ளார்.
['பேட்ட' படப்பிடிப்பில் இணைந்த விஜய் டிவி பிரபலம், மாளவிகா மோகனன்]

ஹிட்டோ ஹிட்
ஒரு பெரிய ஹிட் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளார் நடிகை. இந்நிலையில் அவர் கால்ஷீட் பிரச்சனையை காரணம் காட்டி வெளியேறிய படம் ஒன்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதை பார்த்து கவலையில் இருக்கும் நடிகைக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி கிடைத்துள்ளது. ஏன், எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று அவர் புலம்புகிறாராம்.

வெற்றி
அவர் கால்ஷீட் பிரச்சனையை காரணமாக சொல்லி வெளியேறிய மற்றொரு படமும் ஹிட்டாகியுள்ளது. அந்த படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெற்றி பெற்றுள்ளதை பார்த்த நடிகை அய்யோ, நாம் நடிக்காமல் போய்விட்டோமே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

சினிமா
2 ஹிட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டு விட்டோமே என்ற கவலையில் உள்ளார் நடிகை. அந்த நடிகை ஒரு படத்தை விட்டு வெளியேறினால் அது நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்று திரையுலகினர் நம்பிவிடாமல் இருந்தால் சரி. இப்படியொரு சென்டிமென்ட் வந்துவிட்டால் நடிகையின் பாடு திண்டாட்டம் தான்.

எதிர்பார்ப்பு
இந்த படங்கள் போனால் என்ன பாலிவுட் பக்கம் போய் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று தனக்கு தானே ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறாராம். அவர் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவது மிகவும் கடினம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











