’பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்த விஜய் டிவி பிரபலம், மாளவிகா மோகனன்

வாரணாசி: பேட்ட ஷூட்டிங்கில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் பேட்ட. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்திர பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்று வருகிறது.

Petta shooting spot update!

இப்படத்தின் ஷுட்டிங்கில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாளவிகாவும், இந்திய சினிமாவின் முக்கிய நபரான ரஜினிகாந்துடன் தன்னுடைய அடுத்த படம் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மல்டி ஸ்டாரர் படமான 'பேட்ட' யில் விஜய் டிவி பிரபலமான நடிகர் வெங்கடேஷும் இணைந்துள்ளார். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றவர் வெங்கடேஷ், இப்போது படங்களிலும் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் மற்றும் சசிகுமாருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

'பேட்ட' எனப் பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு பேட்டையை நிரப்பும் அளவுக்கு நடிகர் பட்டாளம் இப்படத்தில் உள்ளது. விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

[பாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்?: லீனா]

அனிருத் இசையமைக்கும் 'பேட்ட' திரைப்படத்தை சன் பிச்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. திரு ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X