ஏம்மா, பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கா அட்ஜஸ்ட் பண்ணுவது?
சென்னை: முட்டைக் கண்ணழகி நடிகை பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கு இறங்கி வருவார் என்று எதிர்பார்க்கவில்லை.
முட்டைக் கண்ணழகி நடிகைக்கு மார்க்கெட் சரியில்லை. அவர் நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் பெரிதாக போகவில்லை. ஒரு படம் ஓடியது. ஆனால் அது அவருக்காக இல்லை.
அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி கதாபாத்திரம் இல்லை.
[விஷால், தனுஷுக்கு ஓகே... ஆனா விவேக்குக்கு... தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் 'எழுமின்'!]

திருமணம்
நடிகைக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவர் குடும்பத்தார் விரும்புகிறார்கள். ஆனால் அவரோ முடிந்த அளவுக்கு நடித்துவிட்டு தான் செட்டில் ஆக வேண்டும் என்ற ஒரு முடிவோடு உள்ளார். பாவம் அவருக்கு நடிப்பும் அவ்வளவாக வராது. படங்களில் மரத்தை சுற்றி வந்து டான்ஸ் ஆடி, சிரிப்பதோடு அவர் வேலை முடிந்துவிடும்.

சம்பளம்
தனக்கு மார்க்கெட் படுத்துவிட்டதை உணர்ந்த நடிகை ஒரேயடியாக அட்ஜஸ்ட் செய்ய முன் வந்துள்ளார். சம்பளத்தை வெகுவாக குறைத்துவிட்டார். கவர்ச்சிக்கு வைத்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டார். பெரிய ஹீரோக்களின் படங்களில் குத்தாட்டம் போட தயாராகிவிட்டார். இது என்ன இந்த நடிகை இந்த அளவுக்கு இறங்கி வந்துவிட்டாரே என்ற பேச்சு எழுந்துள்ளது.

ஹீரோக்கள்
ஹீரோக்களிடம் நல்ல பெயர் எடுத்தால் மட்டும் போதாது என்பது நடிகைக்கு தற்போது தான் புரிந்துள்ளது. ஹீரோக்களை பொருத்த வரை சமத்துப்பிள்ளையாக இருக்கும் அவர் இயக்குனர்களிடமும் நல்ல பெயர் எடுக்க விரும்புகிறாராம். தனது அட்ஜஸ்ட்மென்ட் மூலம் படுத்துக் கிடக்கும் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த திட்டமிட்டுள்ளார்.

நம்பிக்கை
நடிகை நடிப்பில் வெளியாக உள்ள அந்த படத்தை அவர் பெரிதும் நம்பியிருக்கிறார். அந்த படத்தின் மூலம் தனக்கு நடிக்கத் தெரியாது என்று கூறி சிரிப்பவர்களை வியக்க வைக்க நினைக்கிறார். அந்த படம் ஹிட்டானால் தனது மார்க்கெட் நல்ல நிலைக்கு வந்துவிடும் என்று நடிகை ரொம்பவே நம்புகிறார்.


Click it and Unblock the Notifications











