விஷால், தனுஷுக்கு ஓகே... ஆனா விவேக்குக்கு... தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் 'எழுமின்'!

விவேக் நடித்துள்ள எழுமின் திரைப்படத்துக்கு தியேட்டர் கிடைக்காமல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Recommended Video

போதிய தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் எழுமின்- வீடியோ

சென்னை: விவேக் நடித்துள்ள எழுமின் திரைப்படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் எழுமின். தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் விவேக், தேவயானி, பிரேம், அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தற்காப்பு கலையில் சாம்பியனாக விளங்கும் ஆறு மாணவர்களும் நடித்துள்ளனர்.

Not enough theatres for Ezhumin

['அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை!]

இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று வெளியாகிறது. இப்படத்துடன் தனுஷ் நடித்துள்ள வடசென்னையும், விஷாலின் சண்டக்கோழி 2 படமும் திரைக்கு வருகிறது.

மற்ற இரண்டும் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால், அதிகளவில் தியேட்டர்கள் கிடைத்துள்ளன. ஆனால் எழுமின் படத்துக்கு மொத்தமே 65 தியேட்டர்கள் தான் கிடைத்திருக்கிறது.

Not enough theatres for Ezhumin

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள எழுமின் படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காததால் தயாரிப்பாளர் கவலையில் உள்ளார். குழந்தைகளுக்கான படமாக வெளிவந்துள்ள எழுமின் திரைப்படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் பட்சத்தில், விஜயதசமி விழா விடுமுறையில் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க ஏதுவாக இருக்கும் என படக்குழு கோரிக்கை வைத்துள்ளது.

Not enough theatres for Ezhumin

அடுத்த இரண்டு தினங்களுக்குள் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X