ஏன் இப்படி பண்ணுறீங்க.. நடிகைக்கு ஃபோன் செய்து ரெய்டு விட்ட நடிகரின் மனைவி.. செம பஞ்சாயத்து
சென்னை: கோலிவுட்டின் மாஸ் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் ஆறு எழுத்து நடிகர். அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மிகப்பெரிய சோதனைகளை எல்லாம் கடந்து இப்போது தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கும் அவர் எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு கிசுகிசுக்களிலும் சிக்கியவர். இந்தச் சூழலில் அவரது மனைவி நடிகை ஒருவருக்கு ஃபோன் செய்து ரெய்டு விட்ட சம்பவம் கிசுகிசுக்கப்படுகிறது.
இவரெல்லாம் ஒரு நடிகரா என்றுதான் அவர் நடிக்கவந்தபோது பலரும் பேசினார்கள். சினிமா குடும்பத்திலிருந்து வந்ததால் வாரிசு நடிகர் என்ற பெயரையும் பெற்றார். ஆனால் நடிகரோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒவ்வொரு நாளும் தன்னை தானே செதுக்கினார். அதனால் இன்று அவர் மிக பெரிய ஆளுமையாக தமிழ் சினிமாவில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அவர் நடித்த படங்கள் அசால்ட்டாக பாக்ஸ் ஆஃபிஸில் சம்பவம் செய்யக்கூடியவை என்பது கவனிக்கத்தக்கது.

வசூல் ராஜா: அவர் கடைசியாக நடித்த சில படங்கள் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கின. அதேசமயம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றன. முக்கியமாக அவரது படங்கள் ரிலீஸாவதற்கு முன்னரே சில நூறு கோடிகளில் வியாபாரம் ஆகக்கூடியவை. அதன் காரணமாக கோலிவுட்டின் வசூல் ராஜா என்று அவரை விநியோகஸ்தர்களும் சொல்வதுண்டு.
சர்ச்சைகள்: இந்த ஆறு எழுத்து நடிகர் புகழின் உச்சியில் இருந்தாலும் கிசுகிசுக்களில் அடிக்கடி சிக்குவது உண்டு. அதிலும் அவர் நடிக்க வந்த ஆரம்பத்திலிருந்தே ஏராளமான நடிகைகளுடன் சேர்த்து பேசப்பட்டார். அதற்கு காரணம் அவரது படங்களில் அப்படி இப்படியான காட்சிகள் எப்போதும் இருந்தது உண்டு. ஒருகட்டத்தில் ஃபேமஸ் நடிகையுடன் இந்த ஆறு எழுத்து நடிகருக்கு தொடர்பு இருந்ததாகவும்; விலை உயர்ந்த பரிசுகளை அடிக்கடி கொடுத்ததாகவும் பேச்சுக்கள் எழுந்தன.
மாஸ் நடிகருக்கே நோ சொன்ன ஒல்லி நடிகை… குடிப்பழக்கத்தால் பாழாய்ப்போன வாழ்க்கை!
சண்டை போட்ட மனைவி: சூழல் இப்படி இருக்க சில காலம் நடிகையுடன் தொடர்பு இல்லாமல் இருந்தார். அதனையடுத்து எட்டு எழுத்து இயக்குநர் இயக்கிய காஃபி படத்தில் மீண்டும் இணைந்தது அந்த ஜோடி. அதிலிருந்து மீண்டும் அவர்கள் கெமிஸ்ட்ரி பக்காவாக பொருந்திப்போனதாம். இதன் காரணமாக நடிகரின் வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்தது. மனைவியோ நடிகருடன் சண்டை போட்டுவிட்டு அயல்தேசம் பறந்துவிட்டதாகவும் தெரிகிறது.
ரெய்டு விட்ட மனைவி: இந்நிலையில் நடிகரின் மனைவி நடிகைக்கு ஃபோன் செய்து பயங்கரமாக ரெய்டு விட்டாராம். அதாவது நடிகையின் மோகத்திலிருந்து நடிகரை மீட்கவே முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தவர்; இனி இப்படியே விட்டால் சரிவராது என்று தனது தந்தையிடமும், நடிகரின் குடும்பத்திடமும் சொல்லியிருக்கிறார். அதற்கு மூத்தவர்களோ நாங்கள் என்னம்மா செய்ய முடியும் என்று கேட்க; நேரடியாக நடிகைக்கு ஃபோன் செய்தாராம் நடிகையின் மனைவி. அப்போது சேர்ந்து படங்களில் நடிக்கிறீங்க சரி அது உங்க தொழில்; அது என்ன தனி வீட்டில் இருவரும் இருப்பது; படம் முடிந்தால் உங்கள் வேலையை நீங்கள் பார்க்க வேண்டியதுதானே; அடுத்தவங்க குடும்பத்தை ஏன் கெடுக்குறீங்க என பயங்கரமாக திட்டிவிட்டாராம். இதன் காரணமாக நடிகரிடமிருந்து விலகுவதற்கு நடிகை தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











