நடிகரோடு அட்ஜெஸ்ட் செய்திருந்தால் வேற மாதிரி வாழ்க்கை.. பெண் பிரபலத்திற்கு நட்பு வட்டம் அட்வைஸ்
சென்னை: திரையுலகில் இருந்து திடீரென வேறு ஒரு தளத்துக்கு சென்று அங்கே பெரிய இடத்தை பிடிக்கலாம் என்று நினைத்த அந்த பெண் பிரபலம், இப்போது அமைதியாக இருப்பதற்கே காரணம் என்ன என்ற பேச்சுதான் சமீபகாலமாக பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த அவர், இப்போது பெரிய விவகாரங்கள் எதுவாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திரையுலகில் இருக்கும் காலத்திலேயே அந்த பிரபலத்துக்கு ஒரு முன்னணி நடிகருடன் நெருக்கம் ஏற்பட்டதாக பல்வேறு பேச்சுகள் கிளம்பின. அந்த நெருக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டிருந்தால் அவரது வாழ்க்கை இன்று வேறு பாதையில் இருந்திருக்கும் என்றும், ஆனால் சில விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொண்டு அந்த வாய்ப்பையே கைநழுவ விட்டதாகவும் அப்போது சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
அதன் பிறகு வேறு ஒரு முகாமில் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கிய அவர், ஆரம்பத்தில் செம பிஸியாக இருந்தாராம். நிகழ்ச்சிகள், கூட்டங்கள், சமூக வலைதள பதிவுகள் என எங்கு பார்த்தாலும் அவரது முகம்தான் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காலம் மாறியதும், சூழலும் தலைகீழாக மாறிவிட்டதாம்.

அதிகாரத்தோட இணக்கமா இருந்திருக்கலாம்: இதையடுத்து, அந்த பெண் பிரபலத்தின் நெருங்கிய வட்டாரத்தில் சமீபத்தில் நடந்த பேச்சுதான் தற்போது கிசுகிசுவாக வலம் வருகிறது. "அப்போ கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி போயிருக்கலாம்... சில விஷயங்களை பெருசா எடுத்துக்காமல் இருந்திருந்தா, இன்றைக்கு அதிகாரத்தில் இருப்பவர்களோட பக்கத்திலேயே பந்தாவா சுற்றிட்டு இருந்திருப்ப" என்று அவரது நண்பர்கள் வெளிப்படையாகவே கூறியதாக சொல்லப்படுகிறது.
அப்செட்டில் பெண் பிரபலம்: அந்த வார்த்தையை கேட்ட பிறகு அந்த பெண் பிரபலமும் நீண்ட நேரம் அமைதியாக இருந்தாராம். இப்போது எந்த விவகாரத்திலும் தேவையில்லாமல் கருத்து சொல்லாமல் ஒதுங்கியே இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு அவசர முடிவு... ஒரு முன் கோபம்... ஒரு சரியான வாய்ப்பு... இந்த மூன்றுமே சேர்ந்து ஒருவரின் வாழ்க்கை பாதையை எப்படி மாற்றிவிடும் என்பதற்கு இந்த சம்பவத்தை எடுத்துக்காட்டாக கூறி திரையுலக வட்டாரங்களில் இப்போது பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்


Click it and Unblock the Notifications

