கழற்றிவிட்ட நடிகர்.. உயிரை விட சென்ற நடிகையின் அம்மா.. இது எப்போதான் ஓயுமோ தெரியலையே
சென்னை: இந்திய சினிமாவிலேயே திறமை வாய்ந்த நடிகர் என்று பெயர் எடுத்தவர் அவர். தேசிய விருதுகளை எல்லாம் வென்றிருக்கும் அவர்; நடிகையின் அம்மாவுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அதன் பலனாக நடிகையுடைய அம்மா வயிறு நிரம்பிவிட; பஞ்சாயத்து பெரிய அளவில் சென்றுவிட்டது. சூழல் இப்படி இருக்க நடிகையின் அம்மா தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த அந்த நடிகர் இந்திய அளவில் பிரபலமானவர். அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகவும் மெகா ஹிட்டாகவும் ஆகியிருக்கின்றன. அபரிமிதமான உழைப்பை போட்டு தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவரது மார்க்கெட் திடீரென கடந்த சில வருடங்களாக சரிந்துவிட்டது.

என்ன காரணம்?: அதற்கு காரணம் வேறு யாருமில்லை; நடிகர் மட்டும்தானாம். அதாவது எவ்வளவுக்கு எவ்வளவு திறமையுடைய நடிகராக அவர் இருக்கிறாரோ; அதேபோல் பெண்கள் பித்திலும் அவர் நம்பர் ஒன்னில் இருப்பாராம். பார்க்கும் பெண்களை எல்லாம் ஒரு இரவு மனைவியாக்கிட வேண்டும் என்று துடிப்பாராம். ஒருகட்டத்தில் அந்த எண்ணம் மட்டும்தான் நடிகருடைய தலைக்குள் இருந்ததாம். அதன் காரணமாகத்தான் அவரது கவனங்கள் சிதறிவிட; சினிமாவில் தோல்விகள் வந்திருக்கின்றன.
நடிகையின் அம்மாவுடன்: முதலில் தன்னுடன் நடிக்கும் நடிகைகள், துணை நடிகைகள், பாடலில் ஆடும் பெண் நடன கலைஞர்களை எல்லாம் தன்னுடைய வலையில் வீழ்த்தினாராம். இப்படிப்பட்ட சூழலில்தான் தெய்வீக பெயர் கொண்ட படத்தில் நடித்தபோதும், இன்னொரு படத்தில் நடித்தபோதும் நடிகையின் அம்மாவுடனும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பழக்கம் ஏற்படிருக்கிறது. அந்தப் பழக்கம் கட்டில் வரைக்கும் சென்றதாம்.
கர்ப்பமான நடிகையின் அம்மா: பல வருடங்கள் அவர்கள் அந்த மாதிரியான உறவில் இருந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் நடிகரால் நடிகையின் அம்மா கர்ப்பமே ஆகிவிட்டாராம். இதற்கு மேலும் விட்டால் பெயர் நாறிவிடும் என்பதை உணர்ந்து நடிகருக்கும், தனது அம்மாவுக்கும் இருந்த பழக்கத்தை கட் செய்யும் முடிவுக்கு வந்தார் நடிகை. நடிகையின் இந்த முடிவுக்கு நடிகர் முழு ஒத்துழைப்பையும் கொடுத்தாராம்.
சாக போன நடிகையின் அம்மா?: ஆனால் நடிகையின் அம்மாவோ நடிகரை மறக்க முடியாமல் மது போதைக்கு ரொம்பவே அடிமையாகிவிட்டாராம். மேலும் கருவை கலைத்தாலும்; நடிகரை பற்றிய கனவிலிருந்து மீளவே இல்லையாம். நடிகை தன்னால் முடிந்த அளவுக்கு கெஞ்சியும் பார்த்துவிட்டார், கொஞ்சியும் பார்த்துவிட்டார். ம்ஹூம் ஒரு ரெஸ்பான்ஸும் இல்லையாம். இப்படிப்பட்ட நிலைமையில் இனிமேல் நடிகரை விட்டு என்னால் இருக்க முடியாது என சொல்லி தற்கொலைக்கு முயன்றாராம்.
நல்ல வேளையாக அந்த நேரத்தில் நடிகை வீட்டில் இருந்ததால் அம்மாவை காப்பாற்ற முடிந்திருக்கிறது. தன் அம்மா இப்படி இறங்கிவிட்டாரே என்று கடுப்பான நடிகை; நடிகரை நேரில் அழைத்து இதெல்லாம் ஒத்துவராது என்பதை தன்னுடைய அம்மாவுக்கு புரியவைக்கும்படி கெஞ்ச; நடிகரோ நேரில் சந்திப்பதையே தவிர்த்துவருகிறாராம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நடிகை புலம்பி தள்ளுகிறாராம்.


Click it and Unblock the Notifications
