நடிகையை விடாத நடிகர்.. அப்பாவுடன் மீண்டும் சண்டை நாறுதாம்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டின் பெரிய ஹீரோக்களில் ஒருவரான அவர்; நம்பர் நடிகையுடன் இப்போது நெருக்கமாக இருக்கிறார். அடுத்தக்கட்டத்துக்கு போய்விட்டாலும் நடிகையின் சகவாசத்தை விடாத நடிகரை பார்த்து அவரது தந்தை ரொம்பவே நொந்து போயிருக்கிறாராம். விரைவில் அதிலிருந்து வெளியே வந்துவிடுவார் என்று தந்தை எதிர்பார்த்தார்; ஆனால் நடிகரிடம் அப்படி ஒரு அறிகுறியே தெரியவில்லை.
கோலிவுட்டின் ஸ்டார் நடிகர்களில் அவரும் ஒருவர். அவருக்கென பெரிய ரசிகர் படையே இருக்கிறது. அதன் துணையால்தான் சினிமாவிலிருந்து இப்போது அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார். அவர் இப்படி ஒரு மாற்றத்தை மாநிலத்தில் கொண்டு வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவரோ அசால்ட்டாக அத்தனையும் செய்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்.

பிரச்னைகள்: நடிகரை சுற்றி எழாத பிரச்னைகளே இல்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் முன்னதாகவே அவருக்கும், மனைவிக்கும் நடிகை ஒருவரால் பிரச்னை எழுந்தது. அப்போது நடிகரின் தந்தை தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கினார். நடிகரும் தன்னுடைய சேட்டைகளை அடக்கிக்கொண்டு இருந்தார். ஆனால் காஃபி படத்தில் நடித்தபோது மீண்டும் நடிகையுடன் அவருக்கு அட்டாச் ஏற்பட; பழைய நெருப்பு மீண்டும் பற்றிக்கொண்டது.
முற்றிய பிரச்னை: இதை எதிர்பார்க்காத நடிகரின் மனைவி; அவரிடமிருந்து விலக முடிவெடுத்துவிட்டார். இதை நினைத்து ஃபீல் செய்வார் என்று பார்த்தால்; சுதந்திரம் கிடைத்தது மாதிரி நடிகையுடன் சுற்ற தொடங்கிவிட்டார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் யாராலும் அவ்வளவு எளிதாக செல்ல முடியாத இடத்துக்கு சென்றுவிட்டார். சரி இனிமேலாவது நடிகையுடனான சகவாசத்தை சவக்குழியில் வைத்துவிடுவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்தார்கள்.
கெஞ்சிய நடிகரின் தந்தை: ஆனால் இவரோ நடிகையோடு மேற்கொண்டு நெருக்கமானார். இனிமேலும் இதை அப்படியே விட்டால் பெயர் நாறிவிடும் என்பதை உணர்ந்த நடிகரின் தந்தை; சம்பந்தப்பட்ட நடிகையை நேரில் சந்தித்து கையெடுத்து கும்பிட்டு; இனிமேல் என்னுடைய மகனுடன் சுற்றாதே; இல்லையென்றால் திருமணம் செய்துகொள் என கெஞ்சினாராம். நடிகையும் அப்போது பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினார்.
திட்டிவிட்ட தந்தை: நடிகரும் தந்தையின் பேச்சுக்கு கட்டுப்பட்டது மாதிரி இருந்தார். ஆனால் பழைய குருடி கதவை திறடி என்பது மாதிரி; அண்மையில் தனது பிறந்தநாளை நடிகையோடு கொண்டாடினார். இந்தப் புகைப்படத்தை பார்த்த நடிகரின் தந்தை உச்சக்கட்ட டென்ஷன் ஆகிவிட்டாராம். உடனே மகனை அழைத்து சத்தம் போட்டாராம்; ஆனால் நடிகரோ, உடன் இருப்பதால் எல்லா விஷயங்களிலும் தலையிடாதீர்கள் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். சரி மகனிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என்று நடிகையிடம் பேச முயன்றாராம். ஆனால் அம்மணி ஃபோனையே எடுக்கவில்லையாம். இதனால் தனது மனைவியிடம் ரொம்பவே புலம்புகிறாராம் நடிகரின் தந்தை.


Click it and Unblock the Notifications
