உச்சக்கட்ட விரக்தியில் இருக்காராம் மாஸ் நடிகர்.. தனக்கு எதிரிங்க வேற எங்கேயும் இல்லை என புலம்பல்?
சென்னை: மாஸ் நடிகர் போட்ட திட்டமெல்லாம் அவருக்கு எதிராக ஒவ்வொன்றாக திரும்பிக் கொண்டிருப்பதால் உச்சக்கட்ட விரக்தியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
எப்போதுமே தனது படங்களுக்கு சிக்கல் வருவது வாடிக்கை என்றாலும், எல்லா பிரச்சனைகளையும் தனியாளாக சமாளித்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருக்கிறார்.

ஆனால், இந்தமுறை எல்லாமே அவரது கையை மீறி போக காரணமே கூட இருக்கும் சில பேர் தான் என்பதை அறிந்ததில் தான் அவரது மனம் வேதனையடைந்து இருப்பதாக கூறுகின்றனர்.
சந்தோஷமே போச்சு: ஹேப்பியாக எல்லா விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வந்த நடிகர் மற்றவர்களுக்காக ரொம்பவே மெனக்கெட்டு நிறைய விஷயங்களையும் தியாகங்களையும் செய்துள்ளாராம். ஆனால், சமீப காலமாக குடும்ப சூழல் மற்றும் அவரது சினிமா வாழ்க்கை என தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து வருவதால் நடிகரின் சந்தோஷமே டோட்டலாக காலி என்கின்றனர்.
எதிரி வெளியே இல்லை: தொடர்ந்து நடிகர் தேர்வு செய்யும் படங்கள் ஆரம்பத்தில் பரபரப்பாக பேசப்பட்டாலும், கடைசி நேரத்தில் அதன் அவுட்புட் மோசமாக வந்து விடுகிற நிலையில், அப்படியே மயான அமைதியில் விருப்பமே இல்லாமல் தான் படங்களை வெளியிட்டு வருகிறாராம். தனக்கு எதிரிகள் வெளியே யாரும் இல்லை என்றும் நம்பிக்கையுடன் கூடவே வைத்திருக்கும் சிலர் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என சமீபத்தில் புலம்பி பேசி உள்ளார் மாஸ் நடிகர் என தகவல்கள் கசிந்துள்ளன.
ரசிகர்கள் வருத்தப்படுவாங்களே: தன்னை சந்திக்க நினைத்து மனதில் பல ஆசைகளை வளர்த்து வைத்திருந்த ரசிகர்கள் வருத்தப்படுவாங்களே, எந்த பிரச்சனை வந்தாலும் படை பலத்துடன் அடித்து நொறுக்கிட வேண்டும் என நினைத்து ஆரம்பித்த அந்த அமைப்பு கடைசி நேரத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தக் கூட தனக்கு சரியான ஒத்துழைப்பை வழங்க முடியவில்லை என்கிற விரக்தியில் தனது கனவு முடிவில் இருந்தே பின் வாங்கவும் ஆலோசித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்னும் பிரச்சனை வரும்: இந்த சின்ன பிரச்சனையையே சமாளிக்க முடியாத கூட்டத்தை அருகே வைத்திருக்கிறோமே, உள்ளே நாமே தலையை விட்டால், இன்னும் பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் வந்தால், இவர்கள் சமாளிப்பார்களா? அல்லது நம்மை கோர்த்து விட்டு கம்பி நீட்டி விடுவார்களா? என்கிற அச்சமே நடிகருக்கு வந்து விட்டதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











