தயவு செய்து வாழ்த்து சொல்லாத.. 4 சுவருக்குள் இருக்கட்டும்.. நம்பர் நடிகைக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்?
சென்னை: தமிழ்நாட்டில் அந்த நடிகர் பெரிய பிரளயத்தையே உண்டு செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.காலங்காலமாக இருந்த காட்சிகளை எல்லாம் ஒற்றை ஆளாக மாற்றிவிட்டார். அதை பார்த்து அனைவருமே ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகையால் தொடர்ந்து நடிகருக்கு சிக்கல் வரும் என்றுதான் அவருடன் இருப்பவர்கள் பயப்படுகிறார்கள். அதனால் நடிகரும் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆர்டரை போட்டிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் அவர் நடிகராக அறிமுகமாகும்; அவரை கிண்டல் செய்யாத வாய்கள் இல்லை, ஏளனமாக பார்க்காத கண்கள் இல்லை. அவரோ அத்தனையையும் பொறுத்துக்கொண்டு தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டே வந்தார். அதன் பலனாக பெரிய ரசிகர் படையே அவருக்கு உருவானது. இந்தப் படையின் துணையோடு அடுத்தக்கட்டத்துக்கு சென்றுவிட வேண்டும் என முடிவெடுத்து; அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினார்.

இங்கேயும் கை மேல் பலன்: அவரால் எதுவுமே செய்ய முடியாது என்றுதான் பலரும் சொன்னார்கள். பற்றாக்குறைக்கு மனைவியுடன் பிரச்னை, நடிகையுடன் தொடர்பு என எக்கச்சக்க நடைமுறை சிக்கல்களும் அவரை சுற்றி இருந்தன. ஆனால் சினிமாவில் எப்படி அத்தனை தடைகளையும் உடைத்து பலனை அனுபவித்தாரோ; அதேபோல் சினிமாவுக்கு வெளியேயும் கை மேல் பலனை பார்த்துவிட்டார்.
அக்கறைப்படும் உடனிருப்போர்: யாருமே எதிர்பார்க்காத சாதனையை அந்த நடிகர் செய்துவிட்டார். இனி அதை தக்க வைப்பதெல்லாம் அவருடைய கைகளில் மட்டும்தான் இருக்கிறது. அவர் தக்க வைக்க வேண்டுமென்றால்; அவருக்கு இருக்கும் சில பழக்கஙக்ளை நிறுத்திக்கொள்வது அல்லது யாருக்கும் தெரியாமல் வைத்துக்கொள்வது என உடனிருப்பவர்கள் அக்கறைப்படுகிறார்கள். அப்போதுதான் இன்னும் பல வருடங்களுக்கு நடிகரின் அலை அடிக்கும் என்பது அவர்களது திண்ணமான நம்பிக்கை.
என்ன நடந்தது?: அதாவது நடிகை ஒருவருடன் ரொம்பவே நெருக்கமாக இருக்கிறார் நடிகர். அது அவருக்கு தேவையில்லாத கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்து; இமேஜை டேமேஜ் ஆக்கியிருக்கிறது. எனவே அந்த நடிகையுடன் பொதுவெளிகளில் செல்வது போன்ற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுமாறும்; அந்த நடிகையுடனான பழக்கத்தை நான்கு சுவற்றுக்குள் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என சீரியஸான் அட்வைஸ் பறந்ததாம்.
முடிவெடுத்த நடிகர்: முதலில் அந்த ஐடியாவை ஏற்றுக்கொள்ள திட்டவட்டமாக மறுத்தாராம் நடிகர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரே ரியாலிட்டியை புரிந்துகொண்டாராம். அதன் காரணமாக நடிகைக்கு ஃபோனை போட்ட அவர், 'இனிமேல் நீயும் நானும் நான்கு சுவற்றுக்குள் மட்டும் பழகிக்கொள்ளலாம். அவசியமான நிகழ்ச்சி என்றால் ஒன்றாக எல்லலாம். இல்லையென்றால் வேண்டாம். என்னுடைய பிறந்தநாளுக்குகூட நீ வாழ்த்து தெரிவிக்க வேண்டாம்' என ஸ்ட்ரிக்க்ட்டாக சொல்லிவிட்டாராம். நடிகையும், நடிகரின் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்துகொண்டதால் அடக்கி வாசிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications
