நெல்லையில் 120 அடி உயரத்தில் பிரமாண்டமாக நிற்கும் 'தனுஷ்'

By Siva

Recommended Video

நெல்லையில் 120 அடி உயரத்தில் பிரமாண்டமாக நிற்கும் தனுஷ் போஸ்டர் வீடியோ

நெல்லை: வட சென்னை பட ரிலீஸை முன்னிட்டு நெல்லை ராம் தியேட்டர் முன்பு தனுஷுக்கு 120 அடி கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள வட சென்னை படம் நாளை ரிலீஸாக உள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தும் எப்போ சார், படம் முடியும் என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனுஷ் ஒரு வார்த்தை கூட வெற்றிமாறனை கேட்கவில்லை.

120 feet cutout for Dhanush in Tirunelveli

கேங்ஸ்டர் படமான வட சென்னை மூன்று பாகங்களில் வெளியாக உள்ளது. வட சென்னை பட கொண்டாட்டத்தை தனுஷ் ரசிகர்கள் துவங்கிவிட்டனர். நெல்லையில் உள்ள ராம் தியேட்டர் முன்பு தனுஷுக்கு 120 அடி கட்அவுட் வைத்துள்ளனர்.

அந்த கட்அவுட்டுக்கு நிச்சயம் நாளை மாலை போட்டு, பாலாபிஷேகம் செய்வார்கள். பாலாபிஷேகம் செய்யும்போது பாதுகாப்பாக இருந்தால் சரி. செக்கச் சிவந்த வானம் பட ரிலீஸின் போது சிம்புவின் தீவிர ரசிகர் ஒருவர் அவரின் கட்அவுட்டுக்கு கிரேனில் தொங்கியபடி பாலாபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[ஸ்ரீரெட்டி, சின்மயியை கலாய்த்த ராதா ரவி: 'மீ டூ' எல்லாம் மந்திரிகளுக்காம்]

கேரம் சாம்பியனான தனுஷ் கேங்ஸ்டர் உலகில் சிக்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை. தனுஷ் வழக்கம் போன்று நடிப்பில் தெறிக்கவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X