ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி

By Siva

Recommended Video

ரஜினி ரசிகர்களுக்குகாக காத்திருக்கும் அறிவிப்புகள்- வீடியோ

சென்னை: ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி உள்ளது. எது நல்லது, எது கெட்டது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்த ரஜினிகாந்த் படங்களில் தொடர்ந்து பிசியாக உள்ளார். காலா படத்தை அடுத்து கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ரஜினியோ, எதிலும் அவசரம் வேண்டாம் என்று அரசியல் பயணத்தில் நிதானமாக செல்கிறார்.

[6ம் தேதி அல்ல 2ம் தேதியே ரிலீஸாகும் சர்கார்?: இருக்கு மெகா காரணம் இருக்கு]

புதுப்படம்

புதுப்படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் பேட்ட படத்தை முடித்த பிறகு ரஜினி முழு அரசியல்வாதி ஆவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர் பேட்ட படத்தை அடுத்து புதுப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சி துவங்கும் பணி மீண்டும் தள்ளிப் போகிறதா என்று ரசிகர்கள் லேசாக கவலை அடைந்துள்ளனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அருணாச்சலம் போன்ற கதை கொண்ட படத்தில் நடிக்க விரும்புகிறாராம் ரஜினி. அந்த படத்தை முடித்த பிறகு கட்சி, தேர்தல் என்று முழுநேர அரசியல்வாதியாக அவர் முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கடைசி படம்

கடைசி படம்

கட்சி துவங்கும் முன்பு கடைசியாக ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறாராம் ரஜினி. ஒரு நல்ல கதையை தயார் செய்யுமாறு ரஜினி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் தெரிவித்துள்ளாராம். முருகதாஸும் ரஜினிக்காக கதை எழுதத் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. கத்தி, சர்கார் படக் கதை விவகாரம் போன்று எதுவும் வராமல் இருந்தால் சரி.

அரசியல்

அரசியல்

அரசியலுக்கு வருவதால் படங்களில் நடிப்பதை நிறுத்தத் தேவையில்லை. சோறு போடும் தொழிலை கைவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் தெரிவித்தார். அதை தான் ரஜினி பின்பற்றுகிறார் போன்று. இருப்பினும் கட்சி துவங்கும் பணி தள்ளிப் போவது ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. சீக்கிரமாக அரசியலுக்கு வா தலைவா என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X