என்னோட டார்கெட்டே அதான்.. விஜய்யை பார்க்கும்போது.. மாஸ்டர் மகேந்திரனின் பிளான்

சென்னை: குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் பிரபலமாகி; இப்போது கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வரும் மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியால் ட்ரோலுக்கு உள்ளானார். தொடர்ந்து அதுகுறித்து விளக்கமும் அளித்தார். ஒருவழியாக அவரை நெட்டிசன்ஸ் டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். இந்நிலையில் மீண்டும் அவர் விஜய் குறித்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

நாட்டாமை, முத்து, மின்சார கண்ணா என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக 90களில் கலக்கியவர் மாஸ்டர் மகேந்திரன். அப்போதே அவர் லைம் லைட்டில் இருந்ததால்; வளர்ந்த பிறகு பெரிய ஹீரோவாகிவிடுவார் என்று கணிக்கப்பட்டது. அதன்படி அவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். இருந்தாலும் அந்தப் படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஒருகட்டத்தில் ஹீரோ என்ற நிலையிலிருந்து இறங்கி வில்லன் ரோல்களிலும், கேரக்டர் ரோல்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

Actor Master Mahendran Praises Vijay - He Always Took Care Of Everyone on Set
Photo Credit:

புலம்பும் மகேந்திரன்: மகேந்திரன் உண்மையில் திறமையானவர்தான். அழகானவர்தான். நடிகருக்கு வேண்டிய அத்தனையும் அவருக்கு இருக்கின்றன. இருப்பினும் அவர் இன்னமும் உயரிய இடத்துக்கு செல்லாததற்கு காரணம் அவரது ஆட்டிட்யூட் மட்டும்தான் என திரைத்துறையில் அவர் காதுபடவே சொல்பவர்கள் உண்டு. அதை அவர் மறுத்துதான் வந்திருக்கிறார். இருப்பினும் அப்படி ஒரு இமேஜ் மாஸ்டர் மீது விழுந்தது உண்மைதான்.

Also Read
Gatta kusthi 2 Prashanth Review - கட்டா குஸ்தி பிரசாந்த் விமர்சனம்.. கண்டிப்பாக ப்ளாக் பஸ்டராம்
Gatta kusthi 2 Prashanth Review - கட்டா குஸ்தி பிரசாந்த் விமர்சனம்.. கண்டிப்பாக ப்ளாக் பஸ்டராம்

மாட்டிய மகேந்திரன்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் சில வாரங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் மின்வெட்டு குறித்தும், விஜய் குறித்தும் பேசிய அவர், 'மின்வெட்டு நடந்தால் கேள்வி கேட்காதீங்க. கொஞ்ச நாள் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளுங்கள். சோலாரிலிருந்து கரண்ட் எடுங்கள். அதெல்லாம் தெரியுமா தெரியாதா?.. எனக்கு தெரியும். வேண்டுமென்றால் என் வீட்டிலிருந்து கரண்ட் எடுத்துக்கொள்ளுங்கள். விஜய் அண்ணாவை கேள்வி கேட்காதீர்கள்' என கூறியிருந்தார்.

அட்மிட் செய்த நெட்டிசன்ஸ்: அவரது அந்தக் கருத்தும், அப்போது அவர் வெளிப்படுத்திய உடல் மொழியும் பெரும்பாலானோரை ட்ரிக்கர் ஆக்கிவிட்டது. உடனடியாக அவரை செமத்தியாக ட்ரோல் செய்தார்கள். ஒருகட்டத்தில் இதை பொறுக்க முடியாமல் விளக்கமும் அளித்தார். அதற்கு பிறகு அவரை டிஸ்சார்ஜ் செய்தார்கள். சூழல் இப்படி இருக்க சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் மீண்டும் விஜய் குறித்து பேசியிருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன்.

என்ன பேசினார்?: அவர் பேசுகையில், "விஜய் அண்ணா மேடையில் பேசும்போது ஒரு வாக்காளராக நான் கீழே நின்றுகொண்டு நிறைய கேட்பேன். எனக்கு தேர்தலில், அரசியலில் எல்லாம் ஈடுபாடு இல்லை. கண்டிப்பாக நான் அவரை பார்க்கும்போது,'அண்ணா சினிமாவுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?' என்றுதான் கேட்பேன். அதுதான் என் டார்கெட். ஏனெனில் எனக்கு அவரை நன்றாக தெரியும்.

ஒரு பிரச்னையும் இருக்காது: அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்பதை கேட்காமலேயே தெரிந்து வைத்திருப்பவர் அவர். அவரது படம் என்றால் யாருக்குமே சம்பள பாக்கி இருக்காது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யக்கூடியவர். அவர் இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X