ஜெய்யை வைத்து படம் பண்ண வேண்டுமா என யோசித்தேன்: நிதின் சத்யா
ஜருகண்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சென்னை: ஜருகண்டி படத்தை ஜெய்யை வைத்து பண்ண வேண்டுமா என யோசித்ததாக நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா தெரிவித்துள்ளார்.
பிச்சுமணி இயக்கத்தில் ஜெய், ரெபா மோனிகா நடித்துள்ள இந்த படத்தில், ரோபோ சங்கர், டேனி ஆனி போப், இளவரசு, போஸ் வெங்கட், அமித், ஜெயக்குமார், ஜி.எம்.குமார், நந்தா சரவணன், காவ்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
ஜருகண்டி திரைப்படம் வரும் 26ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வை நடிகர் டேனி தொகுத்து வழங்கினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் நிதின் சத்யா, ஜெய்யை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டுமா என முதலில் யோசித்ததாகக் கூறினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது,
[குழந்தையை கொஞ்சி மகிழும் விஜய்... வைரலாக பரவும் க்யூட் வீடியோ!]

தயாரிப்பாளராக உயர்வு
"ஜருகண்டி திரைப்படம் மூலம் நான் தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் அடுத்தக்கட்டதுக்கு போக வேண்டும் என்று யோசித்த போது, படம் தயாரிக்கலாம் என தோன்றியது.

பக்கபலமாக இருந்த இருவர்
அதன் பிறகு தான் ஜருகண்டி படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். இந்த படத்தை தயாரிக்க எனக்கு பக்க பலமாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் இணை தயாரிப்பாளர் பத்ரி. மற்றொருவர் என் நண்பரும் நடிகருமான ஜெய்.

முதலில் யோசித்தேன்
முதலில் ஜெய்யை வைத்து படமெடுக்க யோசித்தேன். ஏற்கனவே நிறைய சட்ட சிக்கல்கள் இருக்கிறதே என அவரிடம் கேட்டேன். ஆனால் ஜெய் தான் தைரியம் கொடுத்து படத்தை எடுக்க வைத்தார்.

எனக்காக வேலை பார்த்தனர்
இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருமே பணத்திற்காக இல்லாமல், எனக்காக மட்டுமே பணியாற்றினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

ரிலீஸில் தான் பிரச்சினை
இப்போது படத்தை தயாரிப்பதைவிட ரிலீஸ் செய்வது தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பெரிய படங்கள் சில வந்ததால், வெளியீடு தாமதமாகி வரும் 26ம் தேதி தான் படத்தை ரிலீஸ் செய்கிறோம்.

தொடர்ந்து நடிப்பேன்
இது ஒரு தரமான படம். தொடர்ந்து நிறைய தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக நடிப்பதை நிறுத்திவிட மாட்டேன். அது ஒருபக்கம் நடக்கும்," என நிதின் சத்யா கூறினார்.


Click it and Unblock the Notifications











