கருப்பு படம் அடைந்த வெற்றி.. யோசிக்காமல் சம்பளத்தை ஏற்றிய சூர்யா?.. இத்தனை கோடியா?

சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் உலகம் முழுவதும் வசூலித்தது. அடுத்ததாக சூர்யா நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், ஜித்து மாதவன் இயக்கத்திலும், த.செ.ஞானவேல் இயக்கத்திலும் தலா ஒரு படமும் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவர் தன் சம்பளத்தை அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே எதுவும் நன்றாக நடக்கவில்லை. கருப்பு படத்துக்கு முன்னதாக அவர் கடந்த ஆறு வருடங்களில் நடித்த படங்களில் சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள்தான் மெகா ஹிட்டாகின. ஆனால் அவையும் தியேட்டர்களில் ரிலீஸாகமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. அதனையடுத்து அவர் நடிப்பில் தியேட்டரில் வந்த எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ ஆகிய படங்கள் மோசமான தோல்வியை சந்தித்து மண்ணை கவ்வின. அவற்றில் கங்குவா படமெல்லாம் தோல்வி மட்டுமின்றி பெரிய ட்ரோல்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Actor Suriya Hikes Salary to 100 Crore After Karuppu s Massiv Box Office Success
Photo Credit:

ஆர்ஜே பாலாஜியுடன் கருப்பு: எப்படியாவது ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கொடுத்துவிட வேண்டும் என தீவிரமாக உழைத்தார் சூர்யா. தான் தேர்ந்தெடுக்கும் கதையிலுமேகூட அவர் ரொம்பவே கான்ஷியஸாக இருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஆர்.ஜே. பாலாஜி சொன்ன கருப்பு கதை பிடித்துப்போனது. இதில் நடித்தால் இத்தனை வருடங்கள் ஏங்கிக்கொண்டிருந்த ஒரு கமர்ஷியல் வெற்றி கிடைத்துவிடும் என கணக்கு போட்டார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க; சுவாசிகா உள்ளிட்டோர் எல்லாம் முக்கியமான வேடத்தை ஏற்றிருந்தார்கள்.

Also Read
தாய் கிழவி மெகா ஹிட்.. இயக்குநருக்கு கார் பரிசளித்த சிவகார்த்திகேயன்.. எவ்வளவு விலை தெரியுமா?
தாய் கிழவி மெகா ஹிட்.. இயக்குநருக்கு கார் பரிசளித்த சிவகார்த்திகேயன்.. எவ்வளவு விலை தெரியுமா?

படம் மெகா ஹிட்: ரசிகர்களுக்கு தேவையான கூஸ்பம்ப்ஸ் சீன்ஸ், சூர்யாவுக்கான மாஸ் சீன்கள் எல்லாம் சரியான கலவையில் பாலாஜி கொடுக்க; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் மொத்தம் 300 கோடி ரூபாய் வரை அள்ளியது. இதனால் மகிழ்ச்சியடைந்த சூர்யா; இயக்குநர், கேமரா மேன், இசையமைப்பாளர் ஆகியோருக்கு விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்கினார். இந்தக் கூட்டணியில் கருப்பு திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வாந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அடுத்த படங்கள்: கருப்பு படத்தின் வெற்றி சூர்யாவையும் அவரது ரசிகர்களையும் உற்சாகத்தில் வைத்திருக்கிறது. அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்திருக்கும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதுவும் சூப்பர் ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளரும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். கண்டிப்பாக இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்' என உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பளத்தை ஏற்றிய சூர்யா?: இந்தப் படத்துக்கு பிறகு ஜித்து மாதவன் இயக்கத்திலும், த.செ.ஞானவேல் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் சூர்யா குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி கருப்பு படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அவர் தன் சம்பளத்தை நூறு கோடி ரூபாயாக உயர்த்திவிட்டாராம். தமிழ்நாட்டில் மட்டுமே கருப்பு திரைப்படம் 150லிருந்து 200 கோடி ரூபாய்வரை வசூலித்ததால் இந்த சம்பள உயர்வை சூர்யா செய்திருப்பதாக விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X