டப்பிங் ஸ்டூடியோவில் விஜய், பூஜா ஹெக்டே.. ஏஐயை வைத்து செம கலக்கு கலக்குறாங்களே

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இதன் மீது ஒட்டுமொத்த கோலிவுட்டுக்கும் அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கவிருக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.

அரசியல் களத்துக்கு வந்திருக்கும் விஜய் திரைத்துறையிலிருந்து ஒதுங்கவிருக்கிறார். எனவே தான் நடிக்கும் கடைசி படத்தை காலத்துக்கும் நின்று பேசும்படி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த அவர்; இயக்குநர் ஹெச்.வினோத்தை இயக்குநராக ஃபிக்ஸ் செய்தார். அதன்படி படத்துக்கு ஜனநாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

படம் என்ன செய்யப்போகிறதோ?: இதுதான் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் கண்டிப்பாக தரமான சம்பவமாக இருக்கும் என்பது விஜய் ரசிகர்களின் நம்பிக்கை. ஆனால் இது வினோத்தின் ஒரிஜினல் கதை இல்லை; தெலுங்கில் பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இப்படம் சம்பவம் செய்யுமா இல்லை சத்தமே இல்லாமல் போய்விடுமா என்ற பயமும் அவர்களுக்கு ஒருபக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது.

Vijay Completes Dubbing for His Final Film Jana nayagan
Photo Credit:

இசை வெளியீட்டு விழா: படமானது அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே அரசியல் பிரவேசம் செய்து ஆளுங்கட்சியை அட்டாக் செய்துவரும் விஜய்க்கு கண்டிப்பாக அழுத்தம் கொடுக்க ஜனநாயகன் படத்தை எதிர்தரப்பு பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் என்று கருதப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தளபதி கச்சேரிதான்: இசை வெளியீட்டு விழாவை ஒரு கான்செர்ட்டாக நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது. எனவே விஜய்யின் படங்களில் பாடிய சைந்தவி, ஹரிஷ் ராகவேந்திரா உள்ளிட்ட ஏராளமான பின்னணி பாடகர்களும் பாடகிகளும் டிசம்பர் 27ஆம் தேதி நடக்கும் அந்த விழாவில் கலந்துகொண்டு விஜய் பட பாடல்களை பாடவிருக்கிறார்கள். எனவே அன்றைய தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தளபதி கச்சேரிதான். ரசிகர்களும் அதை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள்.

அபிநய் உருகி உருகி காதலித்தான்.. அன்று நிராகரித்தேன்.. இன்று காதலிக்கிறேன்.. திருமணமான

ஏஐ ஃபோட்டோ ட்ரெண்டிங்: இப்படி ஜனநாயகன் பட இறுதிக்கட்ட வேலைகள் சூடுபிடித்திருக்கும் நிலையில்; விஜய்யும் பூஜா ஹெக்டேவும் ஸ்டூடியோ ஒன்றில் இருக்கும்படி புதிய ஏஐ புகைப்படங்களை ரசிகர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார். அது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X