விஜய் படம் ரிலீஸா?.. எனக்கும் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் வேண்டும்.. அஜித் கேட்டது தெரியுமா?

சென்னை: அஜித்தும், விஜய்யும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் சினிமாவுக்குள் வந்தவர்கள். ஒரு படத்தில் சேர்ந்து நடித்தார்கள். இப்போது அவர்களில் ஒருவர் முதலமைச்சராகிவிட்டார். இன்னொருவர் கார் ரேஸ் பக்கம் சென்றுவிட்டார். அவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும்; தமிழ் சினிமாவில் இவர்கள் இரண்டு பேருக்குமான க்ரேஸ் எப்போதுமே குறையாது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

அஜித் மற்றும் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். அவர்கள் 90களில் நடிக்க வந்தார்கள். முதலில் ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அதனைத் தொடர்ந்து நேருக்கு நேர் படத்திலும் இணைந்தார்கள். ஆனால் சில காரணங்களால் அஜித் அதிலிருந்து வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கவே இல்லை. தனித்தனியாக நடித்து ஆள் ஆளுக்கு தங்களுக்கென அசைக்க முடியாத மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Wanted First Day Ticket for Vijay s Sarkar Producer Reveals Interesting Incident
Photo Credit:

செம போட்டி இரண்டு பேருக்கும்: இவர்கள் இரண்டு பேரும்தான் ரஜினி Vs கமலுக்கு பிறகு போட்டி நடிகர்களாக அதிகம் கவனிக்கப்பட்டவர்கள். இரண்டு பேருக்குமே வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதால்; அவர்கள் படம் ஒரே நாளில் ரிலீஸானால் போதும்; திருவிழா, கலவரம் என அத்தனையும் அந்த நாளில் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு தியேட்டரில் நிச்சயம் நடந்துவிடும். முதலில் தரையில் நடந்துகொண்டிருந்த சண்டை; காலப்போக்கில் சோஷியல் மீடியா வளர்ச்சியால் அதில் நடக்க தொடங்கிவிட்டது.

Also Read
ஹீரோவாக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்?.. அப்பா ரூட்டில் மகன்?
ஹீரோவாக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்?.. அப்பா ரூட்டில் மகன்?

இரண்டு பேரும் வெவ்வேறு பாதைகளில்: அவர்கள் தங்கள் ரசிகர்களை தொடக்கத்தில் கட்டுப்படுத்தாவிட்டாலும்; அவர்கள் வளர; வளர பக்குவமாய் நடந்துகொள்ளும்படி அவ்வப்போது உணர்த்தினார்கள். அவர்களும் தங்களுக்குள் ஆழமான நட்பை வளர்த்தார்கள். இப்போது விஜய் முதலமைச்சராகிவிட்டார்; அஜித்தோ கார் ரேஸ் பக்கம் ஒதுங்கிவிட்டார். ஒரு தலைமுறையை சந்தோஷப்படுத்திய இரண்டு பேரில் ஒருவர் சினிமாவிலிருந்தே விலகிவிட்டார்; இன்னொருவரோ படம் நடிப்பதே அபூர்வமாக இருக்கிறது. மேலும், இரண்டு பேரும் ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு சேர்ந்து நடிக்காமலேயே போய்விட்டார்களே என்று வருத்தப்படும் ரசிகர்கள் இன்றும் உண்டு.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் குறித்து தயாரிப்பாளர் ராகுல் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "நான் விஜய்யின் தீவிரமான ரசிகன் என்று அஜித்துக்கு நன்றாகவே தெரியும். அது 2018ஆம் ஆண்டு. அந்த ஆண்டு தீபாவளிக்கு சர்கார் திரைப்படம் வெளியானது. நான் கண்டிப்பாக போய் பார்ப்பேன் என்று அஜித்துக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

எனக்கும் டிக்கெட் போடு: அவர் என்னிடம், 'என்ன இன்று உன் தலைவன் படம் ரிலீஸாகுது போல. எப்படியும் முதல் நாள் முதல் காட்சி போய் பார்த்துடுவ. எனக்கும் டிக்கெட் போடு நானும் உன்னுடன் வந்து பார்க்கிறேன்' என சொல்லி பார்த்தார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது" என்றார். அஜித்தின் அடுத்த படத்தை பொறுத்தவரை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரும் என தெரிகிறது. அந்தப் படத்தில் அவர் நடிப்பது மட்டுமின்றி அவரே தயாரிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் வட்டமடிக்கிறது. ஒருவேளை அது நடக்கும்பட்சத்தில் ஏகே தயாரிக்கும் முதல் படமாக அது அமையும். அப்படத்தில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் இருந்து பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X