செக்கச் சிவந்த வானம்: தெறிக்கவிடும் சிம்பு ரசிகர்கள்

சென்னை: செக்க சிவந்தவானம் திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கியுள்ள செக்க சிவந்த வானம் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இப்படத்தை திரையுலகினரும், ரசிகர்களும் மிக சிறப்பாக உள்ளதாக பாராட்டி வருகின்றனர்.

Chekka Chivantha Vaanam celebrations!

சூர்யா ரசிகர் ஒருவர் சிம்புவின் மாஸ் எண்ட்ரியை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

சிம்பு ரசிகர்கள் பெங்களூருவில் திரைப்படத்தை கொண்டாடும் வீடியோவை ஒருவர் பகிர்ந்துள்ளார். அதிகாலை காட்சியின்போதே ஸ்ரீநிவாஸா திரையரங்கில் கொண்டாட்டம் துவங்கி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய கட்டத்திற்கு செல்லும் வரை முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக இருப்பதாகவும், மணிரத்னத்தின் வின்டேஜ் ஸ்டைல் மீண்டும் வந்துள்ளதாகவும் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய கிளாசியான இயக்கத்திற்கு திரும்பியுள்ளதாகவும், ரஹ்மானின் பின்னனி இசை, நடிகர்களின் பங்களிப்பு எல்லாம் சிறப்பாக இருக்கிறது என காமன் மேன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எஸ்டிஆர் என டைட்டில் போடும்போது விசில் பறப்பதை பார்க்கமுடிகிறது.

[ சிசிவி முதல் பாதி விறுவிறு, 2வது பாதி லைட்டா மந்தம், கிளைமாக்ஸ் அடி தூள் #CCV ]

பொன்னியின் செல்வன் நாவலை நீங்கள் படித்திருந்தால் கிளைமேக்ஸ் காட்சியை யூகிக்க முடியும். இல்லை என்றால் அதிர்ச்சியூட்டும் அந்த கிளைமேக்ஸ் காட்சியை ரசிப்பீர்கள் என ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். அதனால் பொன்னியின் செல்வன் நாவலுக்கும் படத்திற்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுகிறது.

மாயாஜாலங்களை நிகழ்த்த மீண்டும் மணிரத்னம் வந்துவிட்டார். ஏஆர்.ரஹ்மானின் இசை கேக் மீது ஐஸிங் செய்தது போல் உள்ளது என ரசிகை குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X