சிசிவி முதல் பாதி விறுவிறு, 2வது பாதி லைட்டா மந்தம், கிளைமாக்ஸ் அடி தூள் #CCV
சென்னை: செக்கச் சிவந்த வானம் படம் சிறப்பான ஆக்ஷன் படமாக அமைந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, அரவிந்த்சாமி, ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படம் இன்று வெளியாகியுள்ளது.

படத்திற்கு கதை எந்த அளவுக்கு கை கொடுத்துள்ளதோ அதே அளவுக்கு இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மானின் இசையும் கை கொடுத்துள்ளது. படத்தை பார்த்த நம் ஒன்இந்தியா எழுத்தாளர் தியேட்டரில் இருந்து நம்மிடம் கூறியதாவது,
படம் முழுக்க ஆக்ஷன் தான். முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாவது பாதி லேசாக மந்தமாக உள்ளது. ஆனால் கிளைமாக்ஸ் அருமை. ஆக மொத்தம் பக்கா ஆக்ஷன் படம் என்றார்.
[செக்கச் சிவந்த வானம்: தெறிக்கவிடும் சிம்பு ரசிகர்கள்]
படத்தை பார்த்த ரசிகர்களும் அது குறித்து சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகிறார்கள். மணி இஸ் பேக் என்ற விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பரவலாக பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











