கல்தா கொடுத்த சிவகார்த்திகேயன்?.. தனுஷை ஃபிக்ஸ் செய்த வெஙக்ட் பிரபு.. ஹிண்ட் அதுதானா?
சென்னை: விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய GOAT திரைப்படம் சில வருடஙக்ளுக்கு முன்பு வெளியாகி தோல்வியை சந்தித்தது. அந்தப் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் குறித்து அடுத்தக்கட்ட அறிவிப்புகளும் வரவில்லை; பணிகளும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் வெங்கட் பிரபு ஹீரோவை மாற்றிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இளையராஜா வீட்டிலிருந்து யுவன், கார்த்திக் ராஜா, பவதாரிணி என எல்லோரும் சினிமாவில் பிரபலமாகிவிட்டார்கள். ஆனால் கங்கை அமரனின் வீட்டிலிருந்து வருவதற்கு அப்படி யாருமே இல்லையா என கேள்விகள் எழுந்த சூழலில்தான் வெங்கட் பிரபு வந்தார். அவரை பின்பற்றி பிரேம்ஜி அமரனும் வந்துவிட்டார். முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து இயக்கிய அவருக்கு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கும் சூழலும் அமைந்தது.

படம் மெகா ப்ளாக் பஸ்டர்: மங்காத்தா படமும் மெகா ஹிட்டடித்தது. இதனால் வெங்கட்டின் கரியர் ஒரே படத்தில் ஓஹோவென்று மாறியது. மங்காத்தா கொடுத்த வெற்றி; பெரிய ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அந்தவகையில் சூர்யாவை வைத்து இயக்கிய மாஸ் படம் தோல்வியடைந்தது. இருப்பினும் வெங்கட்டை நம்புவதில் எந்த சந்தேகமும் மங்காத்தா படத்துக்கு பிறகு பெரிய ஹீரோக்களுக்கு இல்லை.
விஜய்யுடன் வாய்ப்பு: அதன்படி விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணைந்தார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த கோட் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, பிரேம்ஜி அமரன், வைபவ், மீனாட்சி சௌதரி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தின் மீது எக்கச்சக்க ஹைப் எகிறியிருந்தது. ஆனால் படம் மோசமான தோல்வியையே சந்தித்தது. இருப்பினும் அந்தப் படத்தில் பயன்படுத்திய கார் நம்பர் ப்ளேட்டில் TN 07 CM 2026 என குறிப்பிடப்பட்டிருந்தபடியே; 2026ஆம் ஆண்டு விஜய் முதலமைச்சராக பதவியேற்றதால்; கோட் தோல்வி படமாக இருந்தாலும் பெர்சனலாக தளபதி ரசிகர்களுக்கு படம் கனெக்ட் ஆகியிருக்கிறது.
எஸ்கேவுடன் படம்: கோட் படத்தின் தோல்வியால்; அடுத்த படத்தில் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் வெங்கட். அதன்படி சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கவிருப்பதாக சொல்லப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பே இந்தக் கூட்டணியில் படம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அப்போது விஜய்யின் கோட் பட வாய்ப்பு வந்ததால் அங்கு சென்றார் இயக்குநர். அந்தப் படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் எஸ்கேவுடனான படம் தொடங்கப்படவில்லை.
என்ன பிரச்னை?: இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இது சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் வருகிறதாம். இதில் நடிப்பதற்காக கால்ஷீட் பிரச்னையை தாண்டி; எஸ்கே கேட்கும் சம்பளம்தான் பிரச்னையை கொடுப்பதாக தயாரிப்பு தரப்பு ஃபீல் செய்வதாகவும்; இதனால் சிவா இதிலிருந்து வெளியேறிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
என்ன தகவல்?: அதாவது, இந்தப் படத்தில் இப்போது தனுஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம். சமீபத்தில்தான் வெங்க்ட் பிரபுவிடம் தனுஷ் கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டதாகவும்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு பத்தாம் தேதி வரும் என்றும் தெரிகிறது. இதுதொடர்பாக தனுஷ் கொடுத்த ஹிண்ட்தான், அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியாகியிருக்கும் DXV என்ற போஸ்டர் எனவும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications
