இரண்டு வருடங்களாக.. இவ்வளவு நடந்தும் மாதம்பட்டி ரங்கராஜை விட்டுக்கொடுக்காத முதல் மனைவி
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஜாய் கிரிஸில்டாவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் நடந்தது. அது இரண்டு பேருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும். ஆனால் ஜாயிடமிருந்து ரங்கராஜ் விலக நினைத்ததால் அந்த விஷயம் பொதுவெளிக்கு வந்தது. அதனையடுத்து டிஎன்ஏ டெஸ்ட்டில் அந்தக் குழந்தைக்கு தந்தை மாதம்பட்டியார்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
தமிழ்நாட்டில் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவர் ஒரு புகார் மனுவை கொடுத்திருந்தார். அந்து மனுவில், 'ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றுவதாகவும்; தான் கர்ப்பமாக இருக்கிறேன்' என்றும் தெரிவித்திருந்தார். அது பெரும் பரபரப்பை உண்டு செய்தது.

நீண்ட கதை: அதனையடுத்து பல வீடியோக்களையும், போஸ்ட்டுகளையும் போட்டு தள்ளினார் கிரிஸில்டா. ரங்கராஜும் அதை தடுப்பதற்கு தன்னால் முடிந்த அத்தனையையும் செய்தார். ஆனால் அவரால் அதை தடுக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் விசாரணைக்கு முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜரான அவர்; பிறந்திருக்கும் குழந்தை என்னுடையதுதான் என்பதை மரபணு சோதனையில் நிரூபித்தால் நான் பார்த்துக்கொள்வேன் எனவும் கூறினார். அந்த சமயத்தில் ஸ்ருதியை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
அதனால்தான் இப்படி: அதாவது, ஸ்ருதி போன்ற பெண்கள் இருப்பதால்தான்; ஆண்கள் எந்த தவறையும் செய்ய துணிச்சலோடு இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் முதல் மனைவி செய்தது வரலாற்று பிழை என்றும் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் ஸ்ருதியை பொறுத்தவரை தனது கணவரை பாதுகாப்பது, அவருக்கு அரணாக நிற்பது என முடிவோடு இருந்தார். என்றே சொல்ல வேண்டும்.
டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்: இறுதியாக எப்படியோ டி.என்.ஏ டெஸ்ட்டில் பங்கேற்றார் மாதம்பட்டியார்.அதில், அந்தக் குழந்தை ரங்கராஜுக்கு பிறந்ததுதான் என்பது உறுதியானது. இத்தனை கால போராட்டத்தில் தமக்கு சாதகமான முடிவு வந்ததை நினைத்து உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார் ஜாய். அவரது நண்பர்கள், உறவினர்கள், சினிமா ரசிகர்கள் என பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்தையும் தெரிவித்தார்கள். இப்படி நீண்ட கால இழுபறிக்கு பிறகு இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.
ஸ்ருதி சொன்னது: இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "கடந்த இரண்டு வருடங்களில் நான் நிறைய சவால்களை சந்தித்தேன். யார் சொன்னாலும் இன்ஃப்ளூயன்ஸ் ஆகக்கூடாது. கணவன், மனைவிக்குள் புரிதல் ரொம்ப முக்கியமான விஷயம். நான் இன்று வெற்றியடைந்திருப்பதற்கு ரங்கராஜ் மட்டும்தான் காரணம். நம் மனசாட்சிக்கு உண்மையாக இருந்தால் போதும்" என்றார்.


Click it and Unblock the Notifications
