Gatta Kusthi 2 Day 5 Box Office - கட்டா குஸ்தி 2 ஐந்தாவது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் சூப்பர்

சென்னை: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, மோக்‌ஷா, ரம்யா கிருஷ்ணன், கருணாஸ், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை சந்தித்த இந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அதன் 5 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

செல்லா அய்யாவு இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. ஹீரோயினுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் வைத்து வந்த அந்தப் படத்தை ரசிகர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடினார்கள். முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பால் உருவான நம்பிக்கை; அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தையும் உருவாக்க இயக்குநருக்கு உத்வேகம் கொடுத்தது. அதன்படி இரண்டாவது பாகத்தை இயக்கினார். இதில் புதிதாக மோக்‌ஷா, ரம்யா கிருஷ்ணன், சாரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Gatta Kusthi 2 Day 5 Box Office Collection - Vishnu Vishal Starrer Collects 18 40 Crore
Photo Credit:

எப்படி இருக்கு படம்?: ரிலீஸுக்கு முன்னதாகவே திரையிடப்பட்ட ப்ரிவ்யூ ஷோவில் படத்துக்கு அப்ளாஸ் கிடைத்தது. கண்டிப்பாக இது ஹிட்டடித்துவிடும் என்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் அடித்து கூறினார்கள். அது கொஞ்சம் படக்குழுவுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதே நம்பிக்கையோடு சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் கோலாகலமாக ரிலீஸானது படம். ரசிகர்களும் ஆர்வட்துடன் படம் பார்க்க சென்றார்கள்.

Also Read
Isakapatnam Review - இசக்கப்பட்னம் விமர்சனம்.. ரொம்ப சோதிச்சிட்டாங்க.. எப்படி இருக்கு வெப் சீரிஸ்?
Isakapatnam Review - இசக்கப்பட்னம் விமர்சனம்.. ரொம்ப சோதிச்சிட்டாங்க.. எப்படி இருக்கு வெப் சீரிஸ்?

படம் சூப்பர் டூப்பர் ஹிட்: அவர்கள் எதிர்பார்த்தபடியே முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகமும் போர் அடிக்காமல், சோதிக்காமல் இருந்தது. இதிலும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு தேவையான ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. முதல் பாகத்தில் எப்படி அவர் கலக்கினாரோ அதேபோல் இந்தப் படத்திலும் அசத்திவிட்டார். அதிலும், விஷ்ணு விஷாலுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் வரும் குஸ்தி போட்டி உண்மையில் ரசிக்கும்படியாகவே இருந்தது. அத்தனையையும் தாண்டி இன்னொரு விஷயத்தையும் படம் பேசியிருக்கிறது.

என்ன விஷயம்?: அதாவது கணவன் - மனைவிக்குள் ஏன் பிரச்னை வருகிறது? அப்படி வரும்போது விவாகரத்து மட்டுமே ஒரே வழி இல்லை என குடும்பங்களுக்கு தேவையான விஷயங்களையும் இயக்குநர் கமர்ஷியல் டச்சோடு சொல்லியிருப்பது ரசிக்கும்படியாகவே இருந்தது. இதனால் குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் படமாக மாறிவிட்டது. பெண்கள், குழந்தைகள் தியேட்டர்களுக்கு சென்று குடும்பத்தோடு பார்க்கிறார்கள். அவர்களில் பலர் ரிப்பீட் ஆடியன்ஸாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் வேட்டை: இப்படி விமர்சன ரீதியாக படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்துவிட்டது. இந்நிலையில் வசூல் குறித்த தகவல்களையும் Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி முதல் நான்கு நாட்களில் 15 கோடி ரூபாய்வரை வசூலித்திருந்தது. ஐந்தாவது நாளான நேற்றும் படத்தின் வசூல் சொல்லிக்கொள்ளும்படிதான் இருந்தது. அதாவது 2,201 ஷோக்கள் திரையிடப்பட்டு இரண்டு கோடியே 20 லட்சம் ரூபாய் வசூலித்ததாம். ஐந்து நாட்களில் மொத்தம் அப்படம் 18.40 கோடி ரூபாயை வசூலித்திரூப்பதாக அந்த இணையதளம் தெரிவித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X