இவ்வளவு அழகாக இருக்கீங்களே சிம்பு.. அப்படி மட்டும் செய்யுங்க.. எஸ்டிஆருக்கு அட்வைஸ் செய்த விஜய்
சென்னை: சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே முதலமைச்சர் விஜய்யை சில நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர்களுக்கிடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
சிம்பு இப்போது சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த அவர்; பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்களில் தோல்வியை சந்தித்தார். அந்தப் படத்துக்குப் பிறகு முறையே தேசிங்கு பெரியசாமி, ராம்குமார், அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் படங்களில் நடிக்க கமிட்டானார். இவற்றில் ராம்குமார் இயக்கவிருக்கும் படம் ட்ராப்பாகிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது.

அடுத்த படம்: நிலைமை இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரிய சர்ப்ரைஸாக வெற்றிமாறனுடன் இணைந்திருக்கிறார். அரசன் படமானது வடசென்னை யுனிவர்ஸில் நடக்கும் திரைப்படம் என வெற்றி கூறியிருக்கிறார். ஏற்கனவே அவர்கள் வடசென்னை படத்திலேயே இணைந்திருக்க வேண்டியது என்பது நினைவுகூரத்தக்கது. முதன்முறையாக வெற்றி - சிம்பு கூட்டணி அமைந்திருப்பதால் படத்தின் மீது எக்கச்சக்க ஹைப் எகிறியிருக்கிறது. அதன் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
அஸ்வத்துடன் எப்போது?: அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்த்தை வைத்து தர்மன் படத்தை இயக்குவதற்கு சென்றுவிட்டார். அரசன் படத்தின் பணிகள் முடியும் தருவாயில் இருந்தாலும்; ரஜினி பட வாய்ப்பு வந்ததன் காரணமாக சிம்புவும், ஏஜிஎஸ் நிறுவனமும் அந்தப் படத்தை இயக்கிவிட்டு வாருங்கள் என அனுமதி கொடுத்திருக்கிறார்கள். தர்மன் படத்தை முடித்துவிட்டு சிம்புவுடனான படத்தை தொடங்கவிருக்கிறார் அவர்.
விஜய்யுடன் சந்திப்பு: இதற்கிடையே முதலமைச்சரும், நடிகருமான விஜய்யை சமீபத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தார் சிம்பு. முதலில் தலைமை செயலகத்தில்தான் சந்திப்பதாக இருந்ததாம். ஆனால் அந்த நேரத்துக்கு சிம்புவால் செல்ல முடியாததால் வீட்டுக்கு அழைத்து முதலமைச்சர் சந்தித்தார் என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கல். இந்நிலையில் அந்த சந்திப்பின்போது அவர்கள் பேசிக்கொண்ட உரையாடல் குறித்து சோஷியல் மீடியாவில் தகவல்கள் வட்டமடிக்க தொடங்கியிருக்கின்றன.
இதுதான் பேசினார்களா?: அந்த சந்திப்பின்போது சிம்புவை பார்த்து விஜய், 'இவ்வளவு அழகாக இருக்கீங்களே' என புகழ்ந்து தள்ளிவிட்டாராம். அதுமட்டுமின்றி, 'ஏன் குறைவான படங்களில் நடிக்கிறீர்கள்? நிறைய படங்களில் நடியுங்கள்' என்றும் அட்வைஸ் செய்தாராம். அதற்கு சிம்புவும் ஓகே சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம். விஜய்யின் அட்வைஸ்படி இனிமேல் நிறைய படங்களில் நடித்து விரைவாகவே வெளியிடும் திட்டத்தில் அவர் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். எஸ்டிஆர் ரூட் மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
