Nooru Sami Day 6 Box Office - நூறு சாமி 6வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸ் சுத்தமா படுத்துடுச்சே
சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, லிஜோமோல் உள்ளிட்டோர் நடித்த நூறு சாமி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான இப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. ரிலீஸான முதல் சில நாட்களில் பாக்ஸ் ஆஃபிஸிலும் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் ஆறாவது நாளான நேற்று படத்தின் வசூல் சுத்தமாக படுத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் சசி. அவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து இயக்கிய பிச்சைக்காரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய் ஆண்டியை வைத்து நூறு சாமி படத்தை இயக்கினார். இதில் சுவாசிகா முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி இருந்தது படம்?: சசியின் படம் என்றாலே அதில் எமோஷனல் காட்சிகளுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. அதேபோல் பெண்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் பேசும் காட்சிகளும் இடம்பெறும். அதே ஜானரில்தான் இந்தப் படமும் உருவாகியிருந்தது. ரிலீஸுக்கு முன்னதாக படம் பார்த்த செலிபிரிட்டிகள் ஏகபோகமாக கொண்டாடினார்கள். ரிலீஸுக்கு பிறகு மக்களிடமும் அதே ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
படையெடுத்த ரசிகர்கள்: முதல் நாள் முதல் காட்சி முடிந்ததிலிருந்தே மக்கள் இந்தப் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தார்கள். பெண்கள் மத்தியில் படம் அமோக வரவேற்பு பெற்றதன் காரணமாக; பலர் தங்கள் குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்தார்கள். செலிபிரிட்டிகளிடம் கிடைத்த வரவேற்பு மாதிரியே மக்களிடமும் கிடைத்ததால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தது.
சுவாசிகாதான் டாப்: படத்தை தாங்கி பிடித்திருப்பதே சுவாசிகாதான். ஒட்டுமொத்த கதையும் அவரை வைத்து நகர்கிறது. தனக்கு கொடுக்கப்பட்டிருந்த பவர்ஃபுல்லான ரோலை உணர்ந்து; அதற்கு தகுந்தபடி நடித்து ஸ்கோர் செய்துவிட்டார் அவர். மேலும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
வசூல் நிலவரம் என்ன?: படம் ரிலீஸான முதல் சில நாட்களில் வசூலில் சக்கைப்போடு போட்டது. முதல் மூன்று நாட்களில் முறையே, 69 லட்சம் ரூபாய், ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய், ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய் வசூலித்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கோடிகளில் வந்த வசூல் நான்கு மற்றும் ஐந்தாவது நாட்களில் லட்சங்களாக மாறியது.
ஆறாவது நாளான நேற்றும் அந்தப் படம் வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறதாம். அந்த இணையதளத்தின் தரவுகள்படி ஆறு நாட்களில் மொத்தம் ஆறு கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் அந்த இணையதளம் தெரிவித்திருக்கிறது. நன்றாக போய்க்கொண்டிருந்த வசூல் திடீரென குறைந்திருப்பதால் படக்குழு கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications
