GV Prakash Birthday - ஜிவி பிரகாஷ் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. இத்தனை கோடியா?

சென்னை: கோலிவுட்டில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ். சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டார். இப்போது சிங்கிளாக இருக்கும் அவர்; தொடர்ந்து நடிப்பிலும் இசையமைப்பிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் வேலை பார்த்த ஜிவி பிரகாஷ்; வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படமும், அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.அதனையடுத்து வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதன் காரணமாக குறுகிய காலத்திலேயே அவர் கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ஆகிவிட்டார். அவரது பாடல்களும் பின்னணி இசையும் அனைவரையுமே கவர்ந்தது.

GV Prakash Kumar Turns 39 Net Worth Salary Luxury Cars and Assets Revealed
Photo Credit:

நடிகராக ஜிவி: இசையமைப்பாளராக செம பிஸியாக இருந்த அவருக்கு நடிக்கும் ஆசை வந்தது. அதன்படி ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார். சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், பேச்சிலர் உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. இருப்பினும் எப்படியாவது ஒரு ஹீரோவாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்திட வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் இம்மார்ட்டல், மென்ட்டல் மனதில் உள்ளிட்ட பல படங்கள் வரவிருக்கின்றன.

Also Read
விஜய் காரில் இருந்த கிளாஸ்.. என்னது அது?.. மதுவா? ஜூஸா?.. கிளம்பிய பிரச்னை
விஜய் காரில் இருந்த கிளாஸ்.. என்னது அது?.. மதுவா? ஜூஸா?.. கிளம்பிய பிரச்னை

தேசிய விருது: அவர் பெரும்பாலும் சூப்பரான இசையையே கொடுக்கக்கூடியவர். ஏகப்பட்ட படங்கள் அவரது இசையால் மட்டுமே அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கின்றன. இருந்தாலும் அவருக்கு தேசிய அளவில் எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் இருந்தது. ஒருவழியாக சூரரைப் போற்று, வாத்தி ஆகிய இரண்டு படங்களுக்கும் தேசிய விருதினை வென்றார். அவர் தேசிய விருது வென்றது அனைவருக்குமே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விவாகரத்தும் நடந்தது: இதற்கிடையே பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஜிவி பிரகாஷ். அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறாள். ஆனால் சில காரணங்களால் அவர்கள் இரண்டு பேரும் விவாகரத்து பெற்றுவிட்டார்கள். விவாகரத்து பெற்றாலும் மகளை வளர்ப்பதில் இன்னமும் இரண்டு பேரும் இணைந்தே செயல்படுகிறார்கள். அது மட்டுமின்றி ஜிவி பிரகாஷ் கான்செர்ட்டிலும்கூட சைந்தவி கலந்துகொண்டு பாடல்கள் பாடினார். அது பலரிடமும் பாராட்டை பெற்றது. மேலும் பிரிந்தாலும் இப்படித்தான் ஆரோக்கியமான பழக்கவழக்கத்தில் இரண்டு பேரும் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தார்கள். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

ஜிவி பிரகாஷ் சொத்து மதிப்பு: பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துவரும் சூழலில் ஜிவியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி அவருக்கு மொத்தம் 80 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கிறதாம். ஒரு திரைப்படத்துக்கு இரண்டு கோடியிலிருந்து எட்டு கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறும் அவருக்கு சென்னையில் ஆடம்பரமான பங்களா இருக்கிறது. மேலும் பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வேறு சில தொழில்களிலும் அவர் முதலீடு செய்து அதனை இரட்டிப்பாக்கவும் செய்திருக்கிறார் என்கிறார்கள் அவருடன் நெருங்கி பழகுபவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X