விஜய் காரில் இருந்த கிளாஸ்.. என்னது அது?.. மதுவா? ஜூஸா?.. கிளம்பிய பிரச்னை
சென்னை: நடிகர் விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். ஒரு சி.எம்மாக பல பணிகளை முனைப்போடு செய்துவருகிறார். சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றார். அப்போது அவரே காரை ஓட்டியும் சென்றார். ஆனால் அந்தக் காருக்குள் ஒரு கிளாஸ் இருந்த காட்சிகள் வெளியாகி; அந்த கிளாஸில் இருந்தது என்னவென்பது குறித்து விவாதம் கிளம்பியிருக்கிறது.
தமிழ்நாடு அரசியலில் யாருமே எதிர்பார்க்காத ஒரு மாற்றத்தை விஜய் நிகழ்த்தியிருக்கிறார். பல வருடங்களாக மாநிலத்தை ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தவெக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்து முதலமைச்சராகியிருக்கும் விஜய்; அவர்களுக்கும் தன்னுடைய அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது இந்த செயல்பாடும் பலரிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இனிமேல் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது இங்கு கட்டாயமாகும் எனவும் கருதப்படுகிறது.

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில்: நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் எல்லாம் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்; சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கொல்லூரில் அமைந்திருக்கும் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். சக்தி வாயந்த அந்த அம்மன் கோயிலுக்கு ஏற்கனவே முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சென்றிருக்கிறார்கள். அங்கே சென்றால் சிக்கல்கள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.
விஜய் செய்தது என்ன?: விஜய் அங்கே சென்றபோது அர்ச்சகர்கள் வந்து அவரை வரவேற்று கோயிலுக்குள் அழைத்து சென்றனர். அங்கே சில சிறப்பு பூஜைகள் எல்லாம் நடைபெற்றன. மேலும் அவருக்கு பூரண கும்ப மரியாதையும் அர்ச்சகர்கள் சார்பில் வழங்கப்பட்டது. அந்தக் கோயிலுக்கு ஒரு கிலோ 600 கிராம் எடையிருக்கும் 2.5 அடி நீளத்தில் ஒரு வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார். பிறகு அங்கிருந்து காரில் புறப்பட்டுவிட்டார்.
கார் ஓட்டிய விஜய்: சூழல் இப்படி இருக்க கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு போகும்போதும், அங்கிருந்தும் வரும்போதும் விஜய்யே தன்னுடைய காரை செம கேஷுவலாக ஓட்டி சென்றார். அந்த வீடியோக்கள் எல்லாம் வைரலாகின.மேலும் இந்தியாவில் எந்த முதலமைச்சரும் தன்னுடைய காரை தானே ஓட்டி பார்த்ததில்லை; விஜய் அண்ணா அனைத்திலும் மாற்றம் செய்கிறார் என்றெல்லாம் ஃபயர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
கிளம்பிய பஞ்சாயத்து: ஆனால் அந்த விவகார்த்தில் புதிய பஞ்சாயத்து ஒன்று கிளம்பியிருக்கிறது. அதாவது காரில் பொருட்கள் எல்லாம் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஸ்டோரேஜ் கம்ப்பார்ட்மென்ட்டில் ஒரு கிளாஸ் இருந்தது. அதில் பாதியளவு நிரம்பியபடி ஒரு திரவமும் இருந்தது. அதை பார்த்த எதிர் தரப்பினர், 'அதில் இருப்பது மதுதான். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறாரே' என்று பஞ்சாயத்தை கிளப்பிவருகிறார்கள்.
விர்ச்சுவல் வாரியர்ஸின் பதிலடி: ஆனால் தவெகவை சேர்ந்த விர்ச்சுவல் வாரியர்ஸோ இதற்கும் தகுந்த பதிலடியை கொடுத்துவருகிறார். அந்த கிளாஸில் இருக்கும் திரவம் மது என்று எப்படி உங்களுக்கு உறுதியாக தெரியும்?.. ஒருவேளை அது ஜூஸாக கூட இருக்கலாமே. அல்லது வேறு எதுவாகவோ இருக்கலாம். எதையும் குற்ற கண்ணோடு பார்த்தால் ஒன்றும் செய்ய முடியாது என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி அது பக்கா எடிட்டிங் என்றும் ஒரு கருத்து சோஷியல் மீடியாவில் எழுந்துவருகிறது.


Click it and Unblock the Notifications
