நேற்று ரஜினி.. இன்று கமல்..புது புது கெட்டப்பில் பட்டையை கிளப்பும் ஹரிஷ் கல்யாண்!

சென்னை: தொடர் காதல் திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் இப்பொழுது பியார் பிரேமா காதல் கூட்டணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

Recommended Video

சென்னை: தளபதி சூர்யாவாக மாறிய ஹரிஷ் கல்யாண்.. வெளியானது ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராக முதன்முறையாக களமிறங்கிய பியார் பிரேமா காதல் திரைப்படம் வெளியான அனைத்து இடத்திலும் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்றது

தன்னந்தனி நாடு தமிழ்நாடு, தட்டுகெட்டு போறதென்ன வெளிநாடு.. மாஸ் கிளப்பும் சிம்புவின் தமிழன் பாட்டு! .

இந்த நிலையில் மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணியை பலரும் வியந்து பார்த்து வரும் நிலையில் நேற்று ரஜினிகாந்த் கெட்டப்பிலும் இன்று கமல்ஹாசன் கெட்டப்பிலும் புது புது அப்டேட்டை வெளியிட்டு ஹரிஷ் கல்யாண் பட்டையை கிளப்பி வருகிறார்.

தயாரிப்பாளராகவும்

தயாரிப்பாளராகவும்

இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு ஏற்றவாறு இசை அமைப்பதில் முதன்மை இடத்தை வகித்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இதுவரை எக்கச்சக்கமான திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கின்ற நிலையில், பியார் பிரேமா காதல் திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

காதலர்களின் விருப்பப்படமாக

காதலர்களின் விருப்பப்படமாக

ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்கும் இதில் ஹீரோயினாக ரைசா வில்சன் அறிமுகமானார். மேலும் அறிமுக இயக்குனர் இளன் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்க திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு காதலர்களின் விருப்பப்படமாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

மீண்டும் புதிய திரைப்படத்தில்

மீண்டும் புதிய திரைப்படத்தில்

இந்தத் தலைமுறை காதல் எவ்வாறு இருக்கின்றது என்பதை அச்சு அசலாக காட்டி இருந்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற நிலையில் இந்தக் கூட்டணி இப்பொழுது மீண்டும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளது.

"ஸ்டார்"

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்த நிலையில் படத்திற்கு "ஸ்டார்" என தலைப்பிடப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங்கில் முன்னணியில்

ட்ரெண்டிங்கில் முன்னணியில்

அதுமட்டுமல்லாமல் முதல் போஸ்டரே மரண மாஸாக தளபதி பட ரஜினிகாந்த் கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் அச்சு அசலாக போஸ் கொடுத்திருக்க இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது ட்ரெண்டிங்கில் முன்னணியில் இருந்தது.

இரண்டாம் போஸ்டரும் வைரலாகி

இரண்டாம் போஸ்டரும் வைரலாகி

இதனை தொடர்ந்து "ஸ்டார்" படக்குழு ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் இப்பொழுது சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசன் கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் இருக்கின்றவாறு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டதை அடுத்து, கமல்ஹாசன் ரசிகர்களையும் இது வாய் பிளக்க வைத்திருக்க இப்பொழுது இரண்டாம் போஸ்டரும் வைரலாகி வருகிறது.

இன்று கமல்ஹாசன்

இன்று கமல்ஹாசன்

இவ்வாறு நேற்று ரஜினிகாந்த் இன்று கமல்ஹாசன் என புது புது அப்டேட்களை அள்ளி வெளியிட்டு ஆரம்பமே அமர்க்களமாக அசத்தி வரும் "ஸ்டார்" படக்குழுவின் இந்தத் திரைப்படமும் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X